தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இருப்பதை வைத்து சிறப்புடன் வாழு!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஆயிரம் பிரச்னைகளுக்கு மூலகாரணம் பேராசையும், அது நிறைவேறாமல் போவதால் ஏற்படும் ஏமாற்றமும் துயரமும்தான்.

News image
Updated On :26 ஏப்ரல் 2018, 6:30 pm

ஒய்.டேவிட் ராஜா

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஆயிரம் பிரச்னைகளுக்கு மூலகாரணம் பேராசையும், அது நிறைவேறாமல் போவதால் ஏற்படும் ஏமாற்றமும் துயரமும்தான்.
இதில் சிக்காமல் தப்பிக்க ஒரே வழி, நம்மிடம் இருப்பதில் மன நிறைவுடன் (திருப்தி) வாழ்வதுதான்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தேவன் வைத்திருக்கும் பொக்கிஷங்களில் இந்த திருப்தியும் ஒன்று. நாம் நினைத்தது நினைத்தபடி நடக்கும்போதும், வாழ்க்கைச் சம்பவங்கள்
நமக்குச் சாதகமாக அமையும்போதும் ஏற்படும் மகிழ்ச்சியின் பரிமாணம்தான் மனநிறைவைத் தருகிறது. "எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. இதற்கு மேல் எதுவும்
தேவையில்லை' என்ற எண்ணம் வெளிப்படும்போது, மனநிறைவு அல்லது திருப்தி ஏற்படுகிறது. 
பல சமயங்களில், நம்மிடம் இருப்பதை மறந்து இல்லாத விஷயங்கள் மேல் கவனத்தை செலுத்துகிறோம். இதனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நம்மிடம் இல்லாததை எண்ணி
வருந்துவதை விட நம்மிடம் இருப்பதை வைத்து அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று எண்ணி அதை செயல்படுத்தும்போது எவ்வளவு நன்றாக இருக்கும்! 
உதாரணமாக, ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் பணப்பெட்டியை மாட்டிக்கொண்டு வேகமாகச் சென்றார்.
வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 ரூபாய் முழு கட்டு ஒன்று கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விடுகின்றார். 
100 தாள்களைக் கொண்ட அந்த நூறுரூபாய் கட்டில் இருந்து ஒரு நூறு ரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் சென்று கிடந்தது. அந்த வழியில் வந்த ஒருவரின் கண்ணில் படுகிறது ஒற்றை நூறுரூபாய். இந்த நோட்டை சந்தோஷத்துடன் எடுத்து மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்று, முழு சாப்பாடு 90 ரூபாய்க்கு திருப்தியாக சாப்பிட்டான். மீதியிருந்த பத்து ரூபாயை ஹோட்டல் வாசலில் தன்னிடம் கையேந்திய வறியவருக்கு கொடுத்துவிட்டு, சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு, விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள். மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 99 நோட்டுகள்தான். வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு
கொடுக்கமாட்டார்களே... அந்த ஒற்றை நூறுரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்... அந்த ஒற்றை நூறுரூபாயைத்
தேடினான்.. தேடினான்.. இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான். 
நூறு ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான். 9900 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு நூறு ரூபாய்க்காக
அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கும்போது, ""நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்'' (நீதிமொழிகள் 14:14) என்றும், பிரசங்கி 5:10-இல் ""பணப்பிரியன்
பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை'' என்றும் வாசிக்கிறோம். இருப்பதை வைத்து திருப்தி அடைவதும்,
இல்லாதை நினைத்து வருத்த படாமல் வாழும் மனமுள்ளவர்களே 
உண்மையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.