தஞ்சையில் பஞ்சம் தீர்த்தவர்!
நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையிலும் மக்களின் அன்றாட இன்னல்களுக்கு அருமருந்தளித்து இம்மையையும் பயனுடையதாகச் செய்து மறுமைக்கும் வழிகாட்டத் தோன்றிய வெகுசில மகா புருஷர்களில் ஒருவராக இன்று


நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையிலும் மக்களின் அன்றாட இன்னல்களுக்கு அருமருந்தளித்து இம்மையையும் பயனுடையதாகச் செய்து மறுமைக்கும் வழிகாட்டத் தோன்றிய வெகுசில மகா புருஷர்களில் ஒருவராக இன்று மந்த்ராலயத்தில் பிருந்தாவனவாசியாய் தம்மை வணங்க வரும் பக்தர்களின் குறைகளை நீக்கிக்கொண்டும், வேண்டும் வரங்களை அளிக்கும் கல்பவிருட்சமாக விளங்கிக்கொண்டிருக்கின்றார் மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள். அற்புத மகிமைகள் பல வாய்ந்தது அவரது சரித்திரம்.
அது 1642 -ஆம் வருடம், நாயக்கமன்னர்கள் வம்சத்தில் விஜயராகவநாயக் என்பவர் தஞ்சையை ஆண்டு வந்தார். அவ்வமயம், அண்டை நாடுகளில் படையெடுப்புகள் மிகுதியாக இருந்ததால் போர்களில் தோல்வி முகமாகவே இருந்தது. போதாக் குறைக்கு, இயற்கை செய்த சதியினால் மழை இன்றி வறட்சி மிகுந்து பஞ்சமும் ஆட்கொண்டது. எதிரிகளுடன் சமாதானம் செய்து கொள்ள பெரும் பொருட் செலவுகளை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் மன்னர் தானிய சேமிப்பு களஞ்சியத்திலிருந்து மக்களுக்கு வழங்கி அவர்களின் பசிப்பட்டினிக்கு தீர்வுகாண ஆரம்பித்தார். ஆனால் இந்த நிலை நீடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தீவிரமாக யோசித்த மன்னர் அச்சமயம், கும்பகோணத்தில் இருந்த ராகவேந்தரரை தஞ்சைக்கு அழைத்து வர ஏற்பாடுகளை செய்தார்.
நாயக்க மன்னர்களின் பேரன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரரான ஸ்ரீராகவேந்திரர் உடனடியாக தஞ்சைக்கு வந்தார். தஞ்சாவூரின் மிக மோசமான நிலையை கண்டறிந்தார். உடனே தனது ஆராதனை தெய்வமான மூல ராமரை தியானித்து தானியக் களஞ்சியத்தில் (கிடங்கு) பீஜாட்க்ஷர மந்த்ரத்தை ("ஸ்ரீ' என்ற அட்சரத்தை எழுதியதாகவும் கூறப்படுவது உண்டு) எழுதி அதற்குள் போட்டார். என்ன ஆச்சரியம்! தானியக்களஞ்சியம் முழுவதும் தானியமாக நிரம்பியது. அள்ள அள்ள குறையாமல் இருந்தது. மக்களின் பசிப்பிணி தீர்க்க உடனடியாக சாத்தியமாயிற்று. மேலும் அவர் சில யாகங்கள் செய்ய வருணபகவானின் கருணையும் ஒன்றுசேர அபரிமித மழை பெய்து தஞ்சை தரணியை வளப்படுத்தியது. சோழ மண்டலமே தன்னிறைவு பெற்றது என்று சொல்லவும் வேண்டுமோ நன்றிக்கடனாக மன்னர் அளித்த வைரமாலையை யாகத்தில் அர்ப்பணித்தார் மகான். அதனால் சற்று மனதளவில் கோபம் கொண்டான் மன்னன். அவனின் மனநிலையை அறிந்த மகான் மீண்டும் அக்னிதேவனை பிரார்த்திக்க முன்னிலும் மிகப் பொலிவுடன் அந்த மாலை நெருப்பிலிருந்து மேலே வந்தது. மகான்களின் செயலுக்கு எதாவது அர்த்தம் இருக்கும் என புரிந்துகொண்ட மன்னனும் மன்னிப்பு கேட்டான்.
மந்திராலய திக்ஷத்திரத்தில் 1671-ஆம் ஆண்டு ஜீவனோடு பிருந்தாவன பிரவேசம் செய்தார் ராகவேந்திரர். அவரின் மிருத்திகா பிருந்தாவனம் இந்தியா மட்டுமல்லாமல் பிறநாடுகளிலும் அமைந்துள்ளது. அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டம் நெய்வேலி கிராமத்தில் சூர்யோதயா நகரில் அமைந்துள்ள பிருந்தாவனமும் ஆகும். ஆனால் இது சற்று வித்தியாசமானது. "ஸ்ரீராகவேந்திர க்ரந்தாலயா என்றும்', "ப்ரதிரூபமந்த்ராலயம்' என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. இங்கு ஒரே பார்வையில் ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனத்தையும் அதன் கீழ் ஸ்ரீகுரு ராஜர் அமர்ந்து அருள்பாலிப்பதையும் தரிசித்து ஆனந்த அனுபவம் பெறலாம்.
இன்னும் பல சிறப்பான அம்சங்கள் வாய்க்கப்பெற்ற இந்த க்ரந்தாலயத்தில் மகானின் 347 -ஆவது ஆண்டு ஆராதனை மகோத்சவம் ஆகஸ்ட் 27 (பூர்வ), ஆகஸ்ட் 28 (மத்ய), ஆகஸ்ட் 29 (உத்ர) என மூன்று நாள்களிலும் முத்தான நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் ஊத்துக் கோட்டை சாலையில் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது க்ரந்தாலயம்.
தொடர்புக்கு: 94459 52585/ 98845 52585.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...