தவசீலர்கள் அலங்கரிக்கும் தபோவனம்!
ஆதிசங்கர பகவத் பாதாளை முதன்மையாகக் கொண்டுத் திகழும் அருள் மரபே ஸ்ரீகாமகோடி பீடாதிபர் திருமரபாகும். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட குருரத்னமாலா, "புண்யஸ்லோக மஞ்சரி' முதலான பல வடமொழி நூல்கள்


ஆதிசங்கர பகவத் பாதாளை முதன்மையாகக் கொண்டுத் திகழும் அருள் மரபே ஸ்ரீகாமகோடி பீடாதிபர் திருமரபாகும். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட குருரத்னமாலா, "புண்யஸ்லோக மஞ்சரி' முதலான பல வடமொழி நூல்கள் இதன் அருள் வரலாற்றை விளக்குகின்றன. செப்பேடுகள், கல்வெட்டுகள், ராஜதரங்கணீயம் முதலான தொல்லிலக்கியங்கள், தஞ்சை சரஸ்வதி மஹால், சென்னை ஆவணக்களரி முதலிய இடங்களில் உள்ள காகித ஆவணங்கள் ஆகியவைகள் இதன் தொன்மையையும், பெருமையையும், வழி வழியாக தொடர்ந்த பேருண்மையையும் பறை சாற்றுகின்றன. ஸ்ரீ காம கோடி பீடாதிபதிகள் "ஜகத்குரு' எனப் பெற்றமைக்குப் பழைய செப்பேடுகள் உண்டு. இந்த பரம்பரையில் மூன்றாவது ஆசார்யாள் முதல் ஒவ்வொருவர் திருநாமத்தின் பின்னும் "இந்திர சரஸ்வதி' சுவாமிகள் என்ற அடைமொழியை சேர்த்து அழைப்பது மரபு.
இப்பீடத்தை தனக்கு முன் அலங்கரித்த 67 குருமார்களுடன்அமர்ந்து காஞ்சி மகாசுவாமிகள் சந்நிதி கொண்டு அவர்களுடன் சேர்ந்து அருள்புரியும் ஒரு தபோவனத்தை கோவிந்தபுரத்தில் திருப்பணிப்பேட்டை என்ற பகுதியில் தரிசனம் செய்யலாம். 1980 -ஆம் வாக்கில் காஞ்சி மகாஸ்வாமிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் சதாராவில் முகாமிட்டிருந்த போது மகான் போதேந்திராள் போன்று தானும் காவிரிக்கரையில் "ராம நாம' ஜபம் செய்த வண்ணம் இருக்க வேண்டும் என்று தன் எண்ணத்தை தன்னுடைய ஆத்மார்த்த சீடர்களிடம் உணர்த்தினாராம். ஒருகால் அதன் வெளிப்பாடே இங்கு தபோவனம் அமைந்ததற்கான காரணம் என்றும் கூறலாம். கடந்த 2010 -ஆம் வருடம் இதன் கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடந்தேறியது.
இங்கு, ஆதிசங்கரருக்கு சிலா திருமேனியும், அதனைத் தொடர்ந்து பீடத்தை அலங்கரித்த குருமார்களுக்கு (அதே வரிசையில்) நர்மதை நதிக்கரையிலிருந்து கொணரப்பட்ட பாணலிங்கங்கள் ரூபமாகவும், படங்களாகவும், மகா சுவாமிகளுக்கு (68 -ஆவது பீடாதிபதி) சுமார் 4 1/2 அடி உயரத்தில் கற் திருமேனியும் அழகாக வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டையாகியுள்ளது. இதைத்தவிர, கணபதி, சுப்ரமணியசுவாமி சந்நிதிகளும், உற்சவ காமாட்சியம்மன், மகாசுவாமிகள் பஞ்சலோக விக்ரக மூர்த்தியும் அமைந்துள்ளது. சிறப்பாக, காஞ்சிப் பெரியவர் நங்கவரம் கிராமத்திற்கு வந்த தருணத்தில் வியாஸபூஜையின் போது சுமார் ஒரு மண்டலம் ஆராதித்து வந்து சிறிய மகாகணபதி சிலையும் "வியாஸ பாரத கணபதி' என்ற பெயரில் பிரதிஷ்டையாகி உள்ளது. இந்த குரு பரம்பரையில் 54 -ஆவது பீடாதிபதியாக விளங்கிய வியாசல மஹாதேவர் இங்குள்ள ஓர் ஓடையின் கரையில் தங்கி காளியம்மனை வழிபடுவது வழக்கமாம். அதனை நினைவு கூறும் வகையில் தபோவனம் அருகில் சிறிய காளியம்மன் சந்நிதியும் கட்டப்பட்டுள்ளது. குருமார்களின் லிங்கத் திருமேனியை அலங்கரிக்கும் வஸ்திரங்களில் அவரவர்களது திருநாமம் குறிக்கப்பட்டிருப்பது சிறப்பான அம்சமாகும்.
இந்த தபோவனத்தில் நித்ய பூஜைகள், வேதபாராயணங்கள், தேவாரப் பதிகம் ஓதுதல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதிமாதம் அனுஷ நட்சத்திரம் ஏகாதச ருத்ரஜபம், அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் போன்ற வைபவங்களுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. வைகாசி அனுஷம் மகாசுவாமிகளின் ஜெயந்தி உற்சவமாக புஷ்ப பல்லாக்கு அலங்கார சேவையுடன் மேளதாளத்துடன் வீதி உலாவுடன் கொண்டாடப்படுகிறது.
உலக நன்மையை முன்னிட்டு டிசம்பர் 28 முதல் 2019 ஜனவரி 3 வரை தலைசிறந்த வேதபண்டிதர்களைக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ண யஜூர் வேத கனபாராயணம் (மூன்றாம் பாதம்) கிரமமாக நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி ஸ்ரீ மகாசுவாமி பிக்ஷôவந்தன டிரஸ்ட் செய்துள்ளது. பக்தர்கள் பங்கேற்று அனைத்து குருமார்களின் அருளையும் ஒரு சேரப் பெறலாம்.
தொடர்புக்கு: 73586 29948 / 99410 36399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...