சித்திரகுப்தன் பிறந்த தினமே சித்ரா பெளர்ணமி என்று கருடபுராணம், யம சம்ஹிதா, பத்மபுராணம் விஞ்ஞான தந்திரம் போன்ற புராண நூல்கள் கூறுகின்றன.
மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் செல்வதற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் உபாயமாக உள்ளவரே சித்திரகுப்தன்.
இறைவனின் காயம் எனும் உடலில் இருந்து பிறந்ததால் இவர் காயஸ்தா என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் இவர் இறைவன் குடி கொண்டுள்ள நம் காயத்தில் தான் குடி கொண்டுள்ளார். எனவே இதை நம் கருத்தில் ஊன்றி நாம் செய்யும் பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை அதிகரித்து இறைவன் அருளால் இருவினையும் நீங்கப் பெற்று முக்தியடைய முயல வேண்டும்.
சித்தர்கள் இச்செயலை அட்டாங்க யோகத்தில் இயமம், நியமம் என வரையறுக்கின்றனர்.
"கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கள் காமம்
இல்லான் இயமத்திடை நின்றானேட'
எனத் திருமூலர் இறைவனை அடையக் கூடிய ஒரு மெய்யடியாரின் குணாம்சங்களை வரையறுக்கின்றார்.
திருவடி பீடத்திற்கு வரும் ஒவ்வொரு மெய்யடியாரும் இறைவனை அடைய தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். கருவறையில் ஒவ்வொருவரும் தங்கள் திருக்கரங்களால் தாங்களே பூஜை செய்து, தங்கள் பாவங்களைப் போக்கும் நிவாரணத்தை எல்லாம் வல்ல இறைவன் அருளால் நம்முள் உணர்ந்து சாப, பாவ நிவர்த்தி பெற்று நல்வழியில் நன்முயற்சியுடன் இறைவனை அடையலாம்.
சித்திரகுப்தன் கேது பகவானுக்கு அதிபதியாக உள்ளார். அந்த கேது நம்முள் எவ்வடிவில் உள்ளார் என்பதை தத்துவார்த்தமாய் விளக்கும் திருத்தலமே திருவடி பீடம்.
மனிதனின் பாவங்களின் மூலகர்த்தா நோய் அந்த நோய் தீர்க்கும் அற்புத மருந்தை சித்தர்கள் கூறிய சித்த வைத்தியம் மூலம் ,திருவடி லோகம் முழுவதும் யாரிடமும் காணிக்கை அல்லது காசு வாங்காமல் நோய்க்கு மருந்து கொடுத்து பெற்ற உபாயத்தால் உருவானதே நம் திருவடி லோகம் முழுவதும். எண்ணிலா அடியார்கள் நோய் தீர்க்க உபாயம் செய்த மருந்துகள் அரைத்த கல்வம் தான் இன்று திருவடி பீடமாக அமைந்துள்ளது. எண்ணிலா அடியார்கள் பாவம் தீர்த்த அந்த திருவடி பீடத்தை வணங்குவதால் நம் பாவம் தீரும் உபாயம் நிச்சயம் நமக்கு கிட்டும்.
இறைவன் அருளால் நம் பாவங்கள் தீரும் உபாயம் அறிய திருவடி பீடம் வாரீர். திருவடி பீட பூஜையில் கலந்து கொண்டு இறையருள் பெறுவீர்.
அமைவிடம்: திருவடி லோகம், கண்டியங்கோவில், திருப்பூர்-641665.
தொடர்புக்கு: 90807 55533.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!
அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி! - ஈரான்

திருப்பம் தரும் தினப்பலன்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


