வேதமாதா காயத்ரி தேவி!

நான்கு வேதங்களில் ஒன்றானதும், முதன்மையானதும், பழைமையானதுமான ரிக் வேதத்திலிருந்து காயத்ரி மந்திரம் உருவாயிற்று. இதனை "சாவித்ரி மந்திரம்' என்றும் சொல்கிறார்கள். 
வேதமாதா காயத்ரி தேவி!
வேதமாதா காயத்ரி தேவி!

நான்கு வேதங்களில் ஒன்றானதும், முதன்மையானதும், பழைமையானதுமான ரிக் வேதத்திலிருந்து காயத்ரி மந்திரம் உருவாயிற்று. இதனை "சாவித்ரி மந்திரம்' என்றும் சொல்கிறார்கள். 

24 எழுத்துக்களைக் கொண்ட இந்த மந்திரம், விஸ்வாமித்ர மகரிஷியால் உருவாக்கப்பட்டு, பன்னெடுங்காலமாக ஓதப்பட்டு வருகிறது. 

"ஓம்' என்பது பிரணவ மந்திரம், அதன் தொடர்ச்சியாக மூன்று பதங்களைக் கொண்ட "பூர் புவ ஸஞிவ' என்ற "வியாஹிர்தீ மந்திரம்' எனப் பிரித்து, இதன் உயிரோட்டத்தைக் கூட்டி, இதனை ஜெபிப்பவருக்கு, அறிவு வளர்ச்சியிலும், உடல் ஆரோக்கியத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வகுத்துள்ளனர். சூரியனைத் துதிக்கும் மந்திரம் இது. 

வேதத்தின் ஒரு பகுதியான ஸ்ரெளதத்தில் வரும் இந்த மந்திரத்தை மூலமாகக் கொண்டே பகவத் கீதை, மனுஸ்மிருதி, ஹரி வம்ஸம் போன்ற நூல்கள் அமைந்துள்ளன.  ஓர் ஆண் அவனது மறுபிறப்பாக (த்வி ஜென்மன்) உபநயனம் என்ற ஒரு நிகழ்வில் வேத மாதா காயத்ரி தேவியை வழிபடும் முறையை ஏற்படுத்தியுள்ளார்கள். 

அந்த உபநயனத்தில் தன் தந்தையே குருவாக இருந்து, அந்த மகனின் காதில் இந்த காயத்ரி மந்திரத்தை உபதேசிப்பார். 
"ஓம் பூர்: புவ: ஸஞிவ: 
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி 
தியோ: யோந: ப்ரசோதயாத்...'

இதன் பொருள் "நம்முடைய புத்தியை, ஒளிமிக்கதாகத் தூண்டும், இந்த உலகினைக் காக்கும் சக்தியை தருகின்ற சூரிய பகவானே உன்னை தியானிக்கிறோம்' என்பதாகும். 

மொத்தம் 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். ஓம் என்பது பிரணவம். புஹடி, புவஹா, சுவஹா என்பது வியாஹ்ருதீ மந்திரம் ஆகும். 
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரையிலான நாட்களில், ஸ்ராவண மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ரிக் வேதிகளும், பெüர்ணமியில் யஜுர்வேதிகளும், ஆவணி மாத அஸ்த நட்சத்திரம் (விநாயக சதுர்த்தி) அன்று சாம வேதிகளும் இந்த உபாகர்மாவை செய்கிறார்கள்.
வேதம் கற்கும் மாணவர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்து கல்வி கற்றபின், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பின் தமக்குத்தாமே அதனை சொல்லிப் பழக வேண்டும்.  வருடத்திற்கு ஒருமுறை ஆவணி அவிட்ட நாளில் உபாகர்மா என்று பூணூலை மாற்றிக் கொண்டு வேத ஆரம்பம் செய்ய வேண்டும். காயத்ரி தேவியை துதிக்க 
வேண்டும். 
உப நயனம் என்றால், இரண்டு கண்கள் ஆகும். மூன்றாவது கண்ணான ஞானக்கண்; அதாவது அறிவுக்கண் திறப்பதற்கான ஒரு சடங்கு இதுவாகும். 
அப்படிப்பட்ட வேத ஆரம்ப தினமான ஆவணி அவிட்ட நாள் வரும் 22.08.2021 -இல் வருகிறது. மறுநாள் 23.08.2021 -இல் காயத்ரி ஜெபமும் வருகிறது. காயத்ரி தேவியைத் தொழுவோம்! பேரானந்தம் அடைவோம்..!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com