பொன்மொழிகள்!

தூய இதயம், தூய உடல், சுறுசுறுப்பு, செயல் புரிய எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் நிலை ஆகியவை ஒருவனிடம் இருக்க வேண்டும்.
பொன்மொழிகள்!


தூய இதயம், தூய உடல், சுறுசுறுப்பு, செயல் புரிய எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் நிலை ஆகியவை ஒருவனிடம் இருக்க வேண்டும்.
-மகாநிர்வாண தந்திரம்

எல்லா மார்க்கங்களும் பின்பற்றுகின்ற இறைவன் அனைத்துக்கும் பழைமையானவன்.
-சாமவேதம்

"நான்' என்றும், "என்னுடையது' என்றும் சொல்லிக்கொண்டு அக்ஞானத்தில் (மதிமயக்கத்தில்) இந்த உடல் கிடக்கிறது. இந்த நிலை புத்திமான்களால், "ஸ்தூலம்' என்று சொல்லப்படுகிறது.
-விவேகசூடாமணி

"துளசி தளம் தரித்து ஹரி நாமஜபம் செய்பவர்களை யமபடர்கள் நெருங்கவே கூடாது' என்று யமதர்மன் கட்டளையிட்டிருக்கிறான்.
-இந்து தர்ம சாஸ்திரம்

ஓ மனமே! துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் கோபம் காரணமாக இருக்கிறது. அதனுடன் பல விகார எண்ணங்களை உண்டு பண்ணும் காமம் இருக்கிறது; இந்த இரண்டும் உனக்கு வேண்டவே வேண்டாம்!
மேலும், மிக மிகக் கொடியதாகிய அகங்காரம், பேராசை, பொறாமை, டம்பம் போன்றவை உன் மனதின் அருகில்கூட வருவதற்கு அனுமதிக்காதே!
-சமர்த்த ராமதாசர் எழுதிய "மானச சுலோக'

இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கைதான் நாம் விடும் மூச்சாகும், தெய்வ நம்பிக்கைதான் நம்முடைய பேச்சாகும், தெய்வ நம்பிக்கைதான் நாம் வணங்கிடும் தெய்வம். அந்த நம்பிக்கைதான் நம்முடைய வலிமையாகும்.
-பக்தியோகம்

"ஸ்ரீ கிருஷ்ணா' என்கிற திருப்பெயர் மங்களங்களை வாரி வாரி வழங்கும். அந்தத் திருப்பெயர் எவனுடைய வாயில் நடனமாடுகிறதோ, அவன் கோடி கோடிப் பிறவிகளில் செய்த பாவக்குவியல்கள் எல்லாம் அந்த நொடியிலேயே எரிந்து சாம்பலாகின்றன.
-விஷ்ணு தர்மோத்தரம்

தனது ஆச்சார அனுஷ்டானங்களான அறநெறிகள் அனைத்தையும் கைகழுவியவனும், அனைத்துப் பாவங்களையும் விரும்பிச் செய்தவனும் பகவானது திருப்பெயரைக் கூறுவானேயாகில், நிச்சயமாகப் பாவங்களிலிருந்து விடுதலை அடைகிறான்.
-வைஸம்பாயன ஸம்ஹிதை

ஒருவன் மிகச் சிறிய அளவாவது நன்மை தரும் சான்றோர் வாய்ச்சொல்லைக் கேட்க வேண்டும். அது சிறியதாயினும் அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
-திருக்குறள், 416

பதினான்கு உலகங்களிலும் எத்தனை எத்தனையோ ஜீவராசிகள் வசிக்கின்றன. அவை ஒன்று சேர்ந்து செய்தாலும், பகவானது ஒரு திருநாமத்திற்கு எத்தனையளவு பாவங்களை அழிக்கும் சக்தி இருக்கிறதோ, அத்தனை பாவங்களைச் செய்ய இயலாது.
-பிரம்மாண்ட புராணம்

ஆசையை ஒழி, பொறுமையைக் கைக்கொள், கொழுப்பை அடக்கு, பாவத்தில் மனதைச் செலுத்தாதே. சத்தியத்தைப் பேசு, மதிப்புடையவருக்கு மரியாதை செய். எதிரிகளைச் சமாதானப்படுத்து, உன் குணங்களைப் பிரகடனம் செய்யாதே, உன் கீர்த்தியைக் காப்பாற்றிக்கொள், துன்புற்றவர்களுக்கு இரங்கு; இதுதான் நல்லவர்களுக்கு அடையாளம்.
-பர்த்ருஹரியின் நீதி சதகம், 80

வியப்பு, பயம், துன்பம் முதலிய எந்த நிலையிலும் இறைவன் பெயரை ஏதோ ஒரு காரணத்தால் ஒருவன் கூறினாலும் நினைத்தாலும், அவன் நற்கதி பெறுகிறான்.
ஒருவன், தான் இறக்கும் சமயத்திலோ, வாழ்க்கையிலோ பகவான் நாமத்தை நினைப்பானேயாகில், அவனது பாவமூட்டைகள் அப்பொழுதே அழிகின்றன.
-சிவகீதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com