வரம் தரும் வள்ளல்!

நவகிரகங்களில் ஒரு கிரகமான வியாழனுக்கே குருவானவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அருள் தரும் 64 சிவமூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தி சொரூபமும் ஒன்று.
வரம் தரும் வள்ளல்!

நவகிரகங்களில் ஒரு கிரகமான வியாழனுக்கே குருவானவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அருள் தரும் 64 சிவமூர்த்தங்களுள் தட்சிணாமூர்த்தி சொரூபமும் ஒன்று.

தோற்றம்: பிறைச்சந்திரனை தன் சடையில் தரித்து, இடது கையில் அக்னியும், வலது கையில் உடுக்கை இணைந்த நாகமும் ஏந்தி, கீழ் இடது கையில் வேதச்சுவடுகளையும், கீழ் வலது கையில் ஆட்காட்டி விரல் நுனியையும், கட்டை விரல் நுனியையும் சேர்த்து, சின்முத்திரையுடன் அஷமாலையை தாங்கிக்கொண்டு, இடது காலை மடித்து, வலது கால் பாதத்தினால் அறியாமை என்றும் அபஸ்மாரனை (முயலகன்) மிதித்த நிலையில் வீராசனமாக அமர்ந்து காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஒன்று பட்டு, ஆனந்தமான பிரம்ம நிலையை அடைவதையே இது உணர்த்துகிறது. மிகவும் அழகிய தோற்றமுடையவர், சாந்த சொரூபமானவர், அமைதியானவர் .

பெரும்பான்மையான சிவாலயங்களில் தெற்கு நோக்கி கோஷ்ட மூர்த்தியாக சிவன் கருவறைக்கு வெளியில் காட்சி தருபவர் இவர். கல்லால மரத்தின் கீழே ஸ்ரீதட்சிணாமூர்த்தி தியான கோலத்தில் அமர்ந்திருக்க, அவரது காலடியில் சனகர், சனாதனர், சனத்குமாரர், சனந்தனர் ஆகிய நான்கு முனிவர்களும் மெய்ஞானப் பொருள் அறிய சீடர்களாக அமர்ந்த கோலத்தினை அனைத்து சிவாலயங்களிலும் காணலாம். சிவாலயங்களில் வித விதமான கோலங்களில் இவருக்கு தனிச்சந்நிதிகள் உண்டு.

வழிபடுவதன் பலன்: வேதம் உணர்த்த வேதநாயகன், ஆதிகுரு, மௌன குரு, தட்சிணாமூர்த்தி, பரம குரு என்று பல்வேறு பெயர்களால் துதிக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தியை வணங்கினால் இந்த உலகில் தோன்றும் அனைத்து ஞானிகளையும் வணங்கிய பலன் உண்டு. இவரை வணங்கினால் நவகிரகங்களையும் வணங்கிய பலனும் உண்டாகும். 

ஆதி குருவான இவரிடம் ஞானம், கல்வி, கேள்வி போன்ற அருளை நாடி வழிபட வேண்டும். குரு என்றால் அறியாமையாகிய இருளை அகற்றுபவர் என்பதாகும் (குரு - "கு' என்றால் இருள், "ரு' என்றால் அகற்றுவது என்று பொருள்). 

ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஈஸ்வரன் - அம்பாளை சேர்த்து வணங்கிய பலன்கள் கிடைக்கும். லலிதா சகஸ்ரநாமத்தில் 725-வது நாமாவளி "ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ரூபிண்யை நமஹ!' என்று வருகிறது.

குருபகவான் வாசம் செய்யும் இடம்: குரு தசாகாலம் என்பது 16 வருடங்கள் ஆகும். குரு பகவானுக்கு உகந்த கிழமை வியாழன், பிடித்த சுவை இனிப்பு, உகந்த உலோகம் பொன் (அதாவது தங்கம்), பிரியமான மலர் முல்லை ஆகும். 
அவர் வாசம் செய்யும் இடம் ஹோமம், யாகம் நடைபெறும் இடங்களாகும்! ஹோமம், யாகம் நடத்தும் இடங்களில் நாம் அழைக்காமலேயே வந்து,  அங்கு எழுந்தருளி அருள் பாலிப்பது குரு பகவானின் விசேட குணமாகும். 

ஹோமம், யாகம் நடைபெறும் இடம்: சென்னை சேலையூரில் உள்ள ஓம் ஸ்ரீஸ்கந்த சேவா சங்கம் என்ற ஆன்மிக அமைப்பினர் கடந்த 16 ஆண்டுகளாக உலக நன்மைக்காகவும், மாணவர்களின் கல்வி மேன்மைக்காகவும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடுகளை நடத்துவதுடன், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி ஹோம வைபவத்தையும் விமரிசையாக நடத்தி வருகின்றனர். 

சற்குரு ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் அருள் ஆசியுடனும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடனும், இவ்வாண்டு டிசம்பர் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், ராஜகீழ்ப்பாக்கம் அருகே உள்ள வி.எஸ். மஹாலில் (ஸ்ரீ வேணுகோபால சுவாமிகள் மடம்),  சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு, அன்று காலை 7 மணி முதல் கணபதி ஹோமம், பார்வதி ஸ்வயம்வரா ஹோமம் (திருமணம் நடக்க), மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் (சர்வ வியாதி நிவர்த்தி; ஆயுள் விருத்திக்காக) ஸ்ரீ ஷோடச (16 லட்சுமி) மஹாலட்சுமி ஹோமம், ஸ்ரீ தன்வந்த்ரி ஹோமம்,  ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி ஹோம வைபவம் ஆகியவை தொடர்ந்து நடைபெறுகிறது. 

அத்துடன் கணபதி, பஞ்சமுக சிவன், மேதா தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற வேண்டி சிறப்பு ஹோமங்களும் நடைபெற உள்ளது. 
ஹோமத்தில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற, ஹோமத்தில் வைத்து ஜபித்த ரட்சை (முடிகயிறு) வழங்கப்படவுள்ளது. வரம் அளிப்பதில் வள்ளலான ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு, அனைத்து நலன்களையும் பெறுவோமாக!

தொடர்புக்கு: சாந்தானந்ததாசன் கே.ராம்மோகன் - 9444200910 / 8148000910.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com