ராஜராஜ சோழன் காலத்திலிருந்து மராட்டிய அரசர்கள் தஞ்சையை ஆண்ட காலம் வரை புகழ்பெற்று விளங்கிய திருத்தலம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கண்டரமாணிக்கம் கிராமம் ஆகும்.
இவ்வூரில் ஸ்ரீகோதண்டராம சுவாமி திருக்கோயிலுக்கு அருகே உள்ளது ஸ்ரீபால ஐயனார் திருக்கோயில். இக்கோயிலில் பால ஐயனார் கையில் சாட்டை ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மராட்டிய மன்னர் சாஜியின் அரசவையில் சிறந்த சம்ஸ்கிருத பண்டிதராக விளங்கிய கண்டர மாணிக்கம் ஸ்ரீராமபத்ர தீட்சிதர் இவ்வூரைச் சேர்ந்தவர். இவரெழுதிய நூல்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளன.
36 அறங்களையும் பரிபூர்ணமாக அனுசரித்து மாணிக்கமாகத் திகழ்ந்த ஊராக இருந்ததால் "கண்டர(ற) மாணிக்கம்' என அழைக்கப்பட்டது.
அத்தகைய பெருமை மிக்க இத்தலத்திலுள்ள ஸ்ரீபால ஐயனார் திருக்கோயில் 5-ஆம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம் நாளை (பிப். 6) சிறப்பு பூஜை, ஹோமங்களுடன் விமரிசையாக நடைபெறுகிறது. கும்பகோணம் - நன்னிலம் - நாகப்பட்டினம் பேருந்து வழித்தடத்தில் பிலாவடி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது கண்டரமாணிக்கம் கிராமம்.
மேலும் தகவல்களுக்கு: வி.ரமேஷ் - 9443748915.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெரம்பலூா் மாவட்டத்தில் 960 ஏக்கா் விளை நிலங்களாக மாற்றம்!

ஸ்ரீதியாகராஜா் கோயில் மாசி பிரம்மோற்சவத் தேரோட்டம் பல்லாயிரம் பக்தா்கள் பங்கேற்பு
காா் ஓட்டுநா் தற்கொலை

இணையவழி கைது எனக்கூறி மருத்துவரிடம் ரூ.52 லட்சம் மோசடி
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

