பொன்மொழிகள்!

விவேகமற்ற ஒருவனை எளிதில் திருப்தி செய்யலாம். நல்ல விவேகம் படைத்தவனை இன்னும் எளிதில் திருப்தி செய்யலாம்.  அல்ப ஞானத்தால் கர்வம்  பிடித்தவனை பிரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.
பொன்மொழிகள்!
பொன்மொழிகள்!

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

விவேகமற்ற ஒருவனை எளிதில் திருப்தி செய்யலாம். நல்ல விவேகம் படைத்தவனை இன்னும் எளிதில் திருப்தி செய்யலாம்.  அல்ப ஞானத்தால் கர்வம்  பிடித்தவனை பிரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.
-பர்த்ருஹரியின் நீதி சதகம், 3
அறிவிலியாகிய இந்த ஏழ்மையின் மனம், நினைக்கக் கூடாதவற்றை எல்லாம் நினைத்து, புண்ணாகிப் போனது; அந்த நிலை இனி போதும் (இனிமேலும் தொடர வேண்டாம்) பராபரமே! 
-தாயுமானவர்,  பராபரக்கண்ணி 35
ஹே ஹனுமானே! நீங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரர்; நீங்கள் தீய சிந்தனைகளை விரட்டுபவர்; நீங்கள் நற்சிந்தனைகளின் நண்பர்.    
-துளசிதாசர்,  ஹனுமன் சாலீஸா 3 
எதையும் உடலுக்கு அவசியமான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதைவிட அதிகமாக ஏற்பது திருட்டு, அது தண்டனைக்கு உரிய செயலாகும்.
-மனு
நாம் இருப்பதும் இறப்பதும், வறுமையும் செல்வமும், "தெய்வச் செயல்' என்று நினைத்து, நம் வீட்டில் அதிதி (விருந்தினர்) போல் இன்பமும் துன்பமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
- ஸ்ரீ ஆதிசங்கரர்
ஆத்மஞானத்தை அக்ஞானிகளாகிய மக்களிடையே பரவச் செய்வதோடு, உலகம் முழுவதையும் தானமாக அளிப்பானாயின், பின்னையது முன்னையதற்கு நிறையில் சமமாகாது.
-மகாபாரதம்
தேகத்தை "ஆத்மா' என்று நினைத்து மயங்கும் புத்தியே துவைதம்; அது இல்லாமல் போவதே அத்வைதம்.
-ஸ்ரீ ரமண மகரிஷி
தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் வீரர்களை வென்றவனைவிட மேலானவன். ஜீவகாருண்யமே நல்லொழுக்கத்தின் அடிப்படையாகும்.
-பகவான் மகாவீரர்
நல்ல வழியில் நன்கு நிர்வகிக்கப் பெற்ற மனம்தான் நமக்கு மாபெரும் உதவி செய்யும். அவ்வளவு தூரம் தாயோ, தந்தையோ, அல்லது வேறு எந்த உறவினருமோ நமக்கு உதவி செய்ய முடியாது.
-பகவான் புத்தர்
நமக்கு நாமேதான் பகைவனும் நண்பனும் ஆவோம்.
இந்தப் பிறவியிலும், அடுத்த பிறவியிலும் இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கும், நல்வினை தீவினைப்
பயன்களை நாம் நுகர்வதற்கும் நமக்கு நாம்தான் 
காரணகர்த்தாவாக ஆகிறோம். அதேபோல, நமக்கு நாமே
 தலைவனாகவும் இருக்கிறோம்.
-திருமூலர் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com