பொன்மொழிகள்!

அன்பர்: ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற தெய்வங்களைக் குறித்து நாமஜபம் செய்வதால அத்வைத அனுபூதி பெற முடியுமா?ஸ்ரீ ரமணர்: ஆஹா! தாராளமாகப் பெற முடியும்.
பொன்மொழிகள்!
Updated on
1 min read

அன்பர்: ஸ்ரீ ராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற தெய்வங்களைக் குறித்து நாமஜபம் செய்வதால அத்வைத அனுபூதி பெற முடியுமா?
ஸ்ரீ ரமணர்: ஆஹா! தாராளமாகப் பெற முடியும்.

-ஸ்ரீ ரமண மகரிஷி

அமுதம் போன்ற இனிய சொற்களால் ஒருவர், ஒரு மூர்க்கனை நல்லவர்களுடைய வழிக்குத் திருப்ப முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒரு யானையைத் தாமரை நூலால் கட்டவும், வாகைப் பூவால் வைரத்தைப் பிளக்கவும், ஒரு துளி தேனால் உப்புக்கடலை இனிமையாக்கவும் ஆசைப்படுவது போன்றதாகும்.
-பர்த்ருஹரியின் நீதி சதகம், 6.

குருவாயூரப்பா! மாயை பக்கத்தில் இருந்தாலும், அத்துடன் கலவாத ஸ்வரூபத்துடன் இருப்பதால் தாங்கள் "சாட்சி' என்று சொல்லப்படுகிறீர்கள். அந்த மாயையில் பிரதிபிம்பமாக பேதம் (வேறுபாடு) போல் தோன்றும் ஜீவனும் தாங்களே, வேறன்று.
-ஸ்ரீமந் நாராயணீயம்

ஹே ஹனுமானே! எத்தனை கடினமான செயலும் உங்கள் அருளால் எளிதில் நிறைவேறிவிடும்.
-ஹனுமன் சாலீஸா, 20.

மனம் இருக்கும் வரை விழிப்பு நிலை, கனவு நிலையின் செயல்பாடுகள் (உலக விவகாரமானது) ஜீவனுக்குத் தோன்றிக்கொண்டுதான் இருக்கும். ஆகவேதான் அறிஞர்கள், "முக்குணமயமான தாழ்ந்த இந்த சம்சாரத்திற்கும், குணாதீதமான உயர்ந்த மோட்சத்திற்கும் இந்த மனமே காரணம்' என்று சொல்கிறார்கள்.
-ஸ்ரீமத் பாகவதம் -11.5.7

எள்ளுக்குள் எண்ணெய் மறைந்திருக்கிறது. நேரடியாக அந்த எண்ணெய் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. "எண்ணெயைக் காண வேண்டும்' என்றால், அந்த எள்ளைச் செக்கிலிட்டு ஆட்ட வேண்டும். அதுபோல இறைவனும் நம் உள்ளத்தில் இருக்கிறான். நம் மனதைப் பக்குவப்படுத்தி, தியான நிலையில் அமர்ந்தால் அந்த ஈசனுடைய ஒளி நம்முள்ளே பிரகாசிக்கும்.
-ஒளவையார்

வேலை செய்வதில் மட்டுமே உனக்கு உரிமை உண்டு, பலன்களில் ஒருபோதும் இல்லை. வினைப்பயனை உண்டாக்குபவன் ஆகிவிடாதே. வேலை செய்யாமல் இருக்கவும் விரும்பாதே.
-பகவத்கீதை - 2.47

நாம் இறந்தபிறகு நம்முடன் வருவது ஏதும் இல்ல. புழு போன்ற நாறும் உடல் எடுத்து இந்தப் பூமியில் வாழ்வதுமில்லை. நமது லட்சியம் மோட்சம் அடைவதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த வழியைத் தேடித் தெளிந்தவர்கள் இந்தப் பூமியில் வெகு சிலரே ஆவர்.
-கடுவெளிச் சித்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com