மகா கும்பாபிஷேகம்
By | Published On : 12th September 2021 06:01 PM | Last Updated : 12th September 2021 06:01 PM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் அண்மையில் விமரிசையாக நடைபெற்றது. இதில், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், நிறுவனருமான ஐசரி கே.கணேஷ், இணைவேந்தர்கள் டாக்டர் ஆர்த்தி கணேஷ், செல்வி பிரீத்தா கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் கிராமத்தில் சின்னத் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காமாண்டக விநாயகர் ஆலயத்தில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செப். 16-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மண்டபத் திறப்பு விழாவும் நடைபெறும். தொடர்புக்கு: 9944371370 / 9944131315.
சென்னை மடிப்பாக்கம், குபேரன் நகர், 8-ஆவது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் செப். 16-இல், குருஜீ காமாட்சி சுவாமிகள் ஆசியுடன், ஸ்ரீகணேச பைரவா சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெற்று வரும் திருப்பணி கைங்கர்யத்தில் பக்தர்கள் பங்கேற்கலாம். தொடர்புக்கு: 9884439191 / 9884105925.
காணாத்துப் பிள்ளையார் ஆலய திருப்பணி!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் மேற்கு பஜார் வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீகாணாத்துப் பிள்ளையார் ஆலயம். கடந்த 1837-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சிதிலமுற்ற கோயிலைப் புனரமைத்து திருப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த மகத்தான கைங்கர்யத்தில் பக்தர்கள் பங்கேற்று எல்லாம் வல்ல விநாயகரின் அருளைப் பெறலாம். தொடர்புக்கு: 9003603655 / 9952523179.
ஜீவரத்ன விநாயகர் ஆலய திருப்பணி!
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு ஸ்ரீ ஜீவரத்ன விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ மீனாட்சியம்மன் உடனுறை ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா மண்டபம் விஸ்தரிப்பு, சுற்றுப்புறச் சுவர் அமைத்தல், 18 சித்தர்களின் சிலை வடித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் சிறப்பாக நடைபெற பக்தர்கள் உதவலாம்..! தொடர்புக்கு: 9444037385 / 9444606220.
பிரம்மோற்சவம்
தஞ்சை மாவட்டம், திருவையாறு மேட்டுத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅபீஷ்டவரத மஹாகணபதி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப். 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உற்சவ காலங்களில் மண்டகப்படிதாரர்கள் பங்களிப்புடன் சிறப்பு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். தொடர்புக்கு: கே.ரவிச்சந்திரன் - 9443561685.