அடியார்களைக் கரைக்கும் பகவான் ரமணர்

"ப்ரஹ்ம்' என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாமலேயே "ப்ரஹ்ம குளம்' பெற்றவர் பசுவான் என்பார் பிரகாசம் பிள்ளை.  பகவானும் இந்தக் கூற்றை ஆமோதித்திருக்கிறார்.
அடியார்களைக் கரைக்கும் பகவான் ரமணர்

"ப்ரஹ்ம்' என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாமலேயே "ப்ரஹ்ம குளம்' பெற்றவர் பசுவான் என்பார் பிரகாசம் பிள்ளை.  பகவானும் இந்தக் கூற்றை ஆமோதித்திருக்கிறார்.

எல்லா குருக்களும் அடியார்களின் துயரங்களைக் கரைப்பார்கள் என்றால், சின்மயானந்தர் சொன்னது போல் அடியார்களையே கரைத்து விடுவார். நேரமோ,  தூரமோ அவருக்கு ஒரு பொருட்டில்லை.

ஒரு வைஷ்ணவர் பகவானிடம் வந்து பகவான், ""என் மனம் தறி கெட்டு ஓடுகிறது.  ஒரு வழி சொல்லுங்கள்''  என்றார் பகவான்.  அவரிடம் , ""உங்கள் சம்பிரதாயத்தில் விஷ்ணு யார், தாயார் யார்?  என்று கேட்டார்.  அவர் விஷ்ணு அந்தர்யாமி. இதயத்தில் இருப்பவர் தாயார் மனம்''  என்றார். 

"அதானே பின்னே ஏன் தாயாரை கட்டுப்படுத்த முனைகிறீர்? அதன் போக்கில் விடுங்கள் சரியாகிவிடும்'' என்றார் பசுவான். ஆந்திர மாநிலம் விஜய நகரிலிருந்து ஒரு பெண்மணி திருவண்ணாமலை வந்தபோது பகவானிடம் புலம்பினார்:  

"பகவானே, முன்னே மாதிரி அடிக்கடி இங்கே வந்து உங்களைத் தரிசிக்க முடியலை, வயசாயிடுச்சு. அதனாலே உங்கப் படத்தை வெச்சு தினமும் பூஜை பண்றேன்!''
"நல்லதும்மா அந்தப் படத்துல நான் தான் நேர்ல இருக்கேன். அந்த பூஜை போதும். இங்கே வரணும்னு அவசியம் இல்லை.''

"பகவான்.  நீங்க சும்மா என்னை சமாதானப்படுத்த சொல்றீங்க?'' பகவான் உடனே விஜயநகரத்தில் அவர் வீடு.  அவர் வணங்கும் படம் பற்றிய விவரம். எங்கே அவர் அந்தப் படத்தை வைத்து, எப்படி, எப்பொழுது பூஜை செய்கிறார் போன்ற விவரங்கள் அனைத்தையும் சொல்ல பக்தை திகைத்துப் போகிறார். அதேபோன்று தென் அமெரிக்காவில்  சிலியிலிருந்து ஒரு தம்பதி கையில் போதிய பணம் இல்லாமையினால் விமானம் தவிர்த்து 6மாதம் கப்பல் பயணம் செய்து, திருவண்ணாமலைக்கு வந்தனர்.  பகவான் அவர்களிடம் அன்புடன் ""அங்கேயே என்னை நினைத்திருக்கலாமே.  ஏன் இவ்வளவு சிரமப்பட்டீர்கள்'' என்றார். 

அவர்கள் கொஞ்சம் அவநம்பிக்கையுடன் அவரைப் பார்க்க, அவர்கள் சிலியில் வசிக்குமிடம், சுற்றியுள்ள தென்னை மரங்கள், கடற்கரை அனைத்தையும் ஒரு கவிஞர் மாதிரி விவரித்தார்.

ஆத்மா இல்லாத நடை பிணங்கள் போல அநேகம் பேர் உலவும்போது பகவான் உடம்பு இல்லாத ஆன்மா போல உலாவினார். அவருக்கு உடல்நலக்குறைவைக் கருத்தில் கொண்டு அநேக பக்தர்கள் வருந்தினார்கள்.  பக்தை சூரி நாகம்மா ஒரு மூலிகை மருந்து தயாரித்து பகவானிடம் கொடுத்து,  ""பகவானே, உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. எவ்வளவோ பக்தர்களின் நோய்களைக் குணப்படுத்தி அவர்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட ஒரு மருந்து தான் இது. தயவுசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கெஞ்சினார்.

அப்போது, பகவானின் முதல் அறுவைச் சிகிச்சை முடிந்து விட்டதால் அதை இன்னொரு நோயாளியான ஒரு பெண்மணிக்குக் கொடுக்க அவர் நோய் நிவாரணம் பெற்றார். இது நம் பழைய கதைகளில் புத்த பிட்சு ஆகப் பயிற்சி பெறும் ஒரு சீடன் குட்டிகளுக்கு இரை கிடைக்காது தவித்த ஒரு பெண் சிங்கம் முன் தன் உடலை அர்ப்பணிக்கத் துணிந்த தியாகத்தை நினைவுபடுத்துகிறது.

பகவானின் பிரத்யேகத் தொண்டராக,  கை கால்களைப் பிடித்துவிடும் வேலை கிடைத்தபோது டாக்டர் அனந்த நாராயண ராவ் அக மகிழ்ந்தார். எல்லாவற்றையும் எல்லோருக்கும் பகிர்ந்தளித்த பகவான் தனது அங்கங்கங்களைக் கூட பகிர்ந்தளித்துவிட்டார்.

ஒரு தொண்டரை வலது கையைப் பிடித்து விடச் சொல்வார். இன்னொருவரை இடது கை என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாகம். டாக்டருக்கு இடது கையைப் பிடித்து விடும் பாக்கியம் கிடைத்தது. பிற்காலத்தில் அதில்தான் நோய் வந்து கடைசி வரை கட்டு போட்டார். பகவான் சித்தியாகும் தருணம் ஜோதி தரிசனம் கிடைக்கப் பெற்றவர் ராவ். இதுபோன்ற சின்னஞ்சிறிய பகவானின் செயல்கள் கூட பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் அனந்த நாராயண ராவ் நினைத்தார். 

பகவானின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு சைகையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அசைக்கமுடியாத உண்மை. ஒன்றிருக்கும். அதுஒன்றும் அந்தக்கணமே தோன்றி மறையும் அற்ப அனுபவமல்ல" என்பார்கள் அன்பர்கள்.

(ஜன. 7 - பகவான் ரமணரின் 143-ஆவது ஜயந்தி)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com