பிரச்னைகளை சமாளிப்பதில் வல்லவர்கள் இந்த ராசியினர் (வாரப் பலன்கள்)
12 ராசிகளுக்கும் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 17 வரையிலான வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.


12 ராசிகளுக்கும் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 17 வரையிலான வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொடர் முயற்சிகள் ஈடேறும் நேரமிது. மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பொருளாதார சிக்கல் தீரும். மனதிற்கு உகந்தவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அனுசரித்து நடந்து கொள்ளவும். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் முதலீடு அதிகரிக்கும். கூட்டுத்தொழில் சாதகமாக அமையும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, மகசூல் பெருகும். பால் பொருள்களின் மூலம் அதிக லாபம் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். கலைத்துறையினர் ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு கலைப் பயணங்கள் நன்மை தரும்.
பெண்மணிகள் உற்றார் உறவினர்களைத் தேடிச்சென்று உதவி செய்வீர்கள். குழந்தைகளை நல்வழியில் செல்ல அறிவுறுத்துவீர்கள். மாணவமணிகள் தேர்வு நேரத்தில் திட்டமிட்டு பாடங்களைப் படிக்கவும். தகுதியான நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 11, 12. சந்திராஷ்டமம்: இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கப் பெறும் நேரமிது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். சுப விரயங்கள் ஏற்பட்டாலும் வருமானம் பெருகும். குழந்தைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய ஊழியர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலுவலக பிரச்னைகளில் சாதுர்யமாக முடிவெடுப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் ஏற்படும் கடுமையான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் தேவை. விவசாயிகள் தானிய உற்பத்தியில் அதிக லாபம் பெறுவீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிப்பதில் கவனமாக இருக்கவும். பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை. பெண்மணிகள் உறவினர்களுடன் மனக்கசப்பைத் தவிர்த்து அன்புடன் நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மாணவமணிகள் வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் இடுவீர்கள். உடற்பயிற்சிகளில் போதிய கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: குரு பகவானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 12, 13.
சந்திராஷ்டமம்: இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
உங்களின் சீரிய முயற்சிகள் மூலம் வருமானம் பெருகும் நேரமிது. பிறருக்கு வாக்கு கொடுக்கும் நேரத்தில் கவனமாக இருக்கவும். தீராப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தென்படும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். பணியிட மாற்றம் குறித்து தெளிவான முடிவை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு வாராக் கடன்கள் வசூலாகும். கடையை விரிவுபடுத்த சிறுசிறு முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகள் மூலம் லாபமடைவீர்கள். கால்நடைகளாலும் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகள் திடீர் பயணங்களால் அனுகூலம் அடைவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை துளிர் விடும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சக கலைஞர்களுக்கு முடிந்த அளவு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சுப காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவர் வழி உறவினர்களால் சிறிது கருத்து வேறுபாடு உண்டாகும். மழலை வரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
மாணவமணிகளின் திறமைகள் பளிச்சிடும். கடும் முயற்சியால் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 12, 14.
சந்திராஷ்டமம்: இல்லை.
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
சுறுசுறுப்புடன் காரியமாற்றி வெற்றி பெறும் நேரமிது. உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரி வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். யாரையும் அலட்சியப் படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த கடினமாக உழைப்பீர்கள். புதிய அனுபவங்கள் ஏற்படும். வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்ய வேண்டிவரும். மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை நிறைவேற்ற கடுமையாகப் போராடுவீர்கள். சோர்வின்றி உழைத்து மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் பிற்கால முன்னேற்றத்திற்கான திறவுகோலாக அமையும். சக கலைஞர்களுக்கும் உதவுவீர்கள்.
பெண்மணிகள் குடும்பப் பொறுப்புகளை கவனத்துடன் நிறைவேற்றுவீர்கள். உடல் நலனிலும் அக்கறை செலுத்தவும். மாணவமணிகள் படிப்பில் தீவிர கவனம் செலுத்தவும். உடல்நலம் பேண யோகா, பிராணாயாமம் செய்து வரவும்.
பரிகாரம்: மகான்களின் சமாதியை வணங்குதல் நலம்.
அனுகூலமான தினங்கள்: 15, 16.
சந்திராஷ்டமம்: இல்லை.
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
உங்கள் வாழ்க்கை வசதிகள் பெருகும் நேரமிது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பிறரால் பாராட்டப்படும். இதுவரை இருந்த எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் அனுகூலமாக அமையும். மனதில் உற்சாகம் பெருகும்.
உத்தியோகஸ்தர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆலோசனைகளை மதித்து நடப்பீர்கள். வியாபாரிகள் கடன் வாங்கித் தொழிலை விருத்தி செய்ய வேண்டாம். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.
அரசியல்வாதிகளுக்கு பேச்சில் கவனம் தேவை. உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு நிகழும். அதனால் நன்மைகளையும் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். வருமானம் பெருகி மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். மாணவமணிகள் அதிகாலையில் எழுந்து படிக்கவும். ஞாபக சக்தி பெருகும். விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: "ராம ராம' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
அனுகூலமான தினங்கள்: 11, 16.
சந்திராஷ்டமம்: இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
உங்கள் எண்ணங்கள் ஈடேறும் நேரமிது. நன்கு சிந்தித்து செயலாற்றுவீர்கள். சேமிப்பு திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். செய்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை விரைந்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உழைப்பிற்கேற்ப ஊதியம் உயரும். வியாபாரிகள் கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்கவும். வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கி, அதிக மகசூல் காண்பீர்கள். பழைய கடன்கள் அடையும்.
அரசியல்வாதிகளுக்கு நெடுநாளைய கனவுகள் பலிக்கும். பகைமை பாராட்டியவர்கள் நண்பர்களாவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். படைப்புகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அதிக மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 12, 17.
சந்திராஷ்டமம்: இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும் நேரமிது. மனதில் புதிய நம்பிக்கை துளிர்விடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். போட்டிகளை எதிர்கொள்ளும் மன வலிமையை பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமையால் ஏற்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவி புரிவார்கள். வியாபாரிகள் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். யாரையும் நம்பி கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். புதிய நிலங்களை வாங்குவீர்கள். கால்நடைகளின் எண்ணிக்கை
அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பயணங்களின் போது அதிக கவனம் தேவை. முக்கிய பொறுப்புக்கு உங்கள் பெயர் மேலிடத்தில் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் உற்சாகம் பெருகும். வருமானம் எதிர்பார்த்த வகையில் இருக்கும்.
பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவும். மாணவமணிகள் வருங்கால கனவுகள் நிறைவேற திட்டமிடுவீர்கள். விளையாட்டில் வெற்றிகள் உண்டாகும்.
பரிகாரம்: இரட்டைப் பிள்ளையாரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 16.
சந்திராஷ்டமம்: 11.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நேரமிது. செய்தொழிலில் நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவுவார்கள். எதிர்ப்புகள் விலகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் பேசும்பொழுது கவனமாக இருக்கவும். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். கொடுக்கல், வாங்கல் விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகள் சந்தையில் போட்டி பொறாமைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கையிருப்பு பொருள்களின் மீது கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டு தாமதமாகக் கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
பெண்மணிகள் எவர் மீதும் கோபத்தைக் காட்டாதீர்கள். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு குருவின் துணையுடன் மனதில் தெளிவு உண்டாகும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்து வரவும்.
பரிகாரம்: சிக்கல் சிங்காரவேலவரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 14, 17. சந்திராஷ்டமம்: 12, 13.
தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
உங்களின் செயல்களை மற்றவர்கள் பாராட்டும் நேரமிது. வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கப்பட்ட வேலைகளைத் தள்ளிப் போடாதீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து ஏற்றம் அடைவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் இருந்த பிரச்னைகள் தீரும். விவசாயிகள் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். அரசு வகையில் சில அனுகூலங்களைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் எவரிடமும் கோபப்படாமல் விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். எதிரிகளும் நண்பர்களாவார்கள். உங்கள் புகழ் கூடும். கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உருவாகும். சக கலைஞர்களுக்கு முடிந்தவரை உதவி செய்வீர்கள். பெண்மணிகள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். மழலை வரவால் மகிழ்ச்சி கூடும்.
மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பாராட்டப்படுவீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 11, 17.
சந்திராஷ்டமம்: 14, 15, 16.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் நேரமிது. பொருளாதார நிலை சிறப்பாக அமையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, ஆக்கபூர்வமாக செயல்படுவீர்கள். உங்கள் மதிப்பு மரியாதை கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வேலைகளைத் துரிதமாக முடிப்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். வியாபாரிகள் கடுமையான போட்டிகளைச் சமாளித்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளால் அதிக லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உங்கள் பங்கு முக்கியமானதாக இருக்கும். மேலிடத்தின் பாராட்டுகளும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் அமையும். விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். பெண்மணிகள் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கணவருடன் அன்பு அதிகரிக்கும். மாணவமணிகள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். பெற்றோர், ஆசிரியர் சொல் கேட்டு நடக்கவும்.
பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 14, 16.
சந்திராஷ்டமம்: 17.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உங்கள் பேச்சாற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நேரமிது. உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் கவனத்துடன் பரிசீலிப்பார்கள். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் அதிகரிக்கும். உடலாரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
உத்தியோகஸ்தர்கள் மனக் குழப்பத்துடன் வேலைகளைச் செய்ய வேண்டி வரும். சக ஊழியர்களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகள் கடும் போட்டிகள் ஏற்பட்டாலும் சமாளித்து முன்னேறுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். கால்நடைகளுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் புகழ், கெüரவம் மேலோங்கும். கலைத்துறையினர் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பொருளாதார நிலை சற்று உயரும்.
பெண்மணிகள் உற்றார் உறவினர்களிடம் வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். ஆடை அணிகலன்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கவனம் செலுத்தவும். அதிகாலையில் எழுந்து படித்து, வெற்றி வாகை சூடுவீர்கள்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 13, 15.
சந்திராஷ்டமம்: இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பயணங்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும் நேரமிது. பிரச்னைகளைச் சமாளிப்பதில் வல்லவர்களாகத் திகழ்வீர்கள். நேர்மையாகவும் கடுமையாகவும் உழைத்து வெற்றிகளை அடைவீர்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும்.
உத்தியோகஸ்தர்கள் பலவிதப் பிரச்னைகளையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். விரும்பத்தக்க இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டுத்தொழிலில் ஒற்றுமை குறையும். தனித் தன்மையை வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்குவீர்கள். கடுமையான உழைப்பினால் லாபம் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்று கட்சியினரின் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உங்களின் திடீர் முயற்சிகள் சாதகமாக அமையும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். உங்கள் திறமையை நிரூபித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் மீது பற்றும், பாசமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் மனதில் இருந்த கவலை நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 16, 17.
சந்திராஷ்டமம்: இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...