விதைப்பவனும் விதையும்!

வேதாகமத்தில் இயேசு கூறிய உவமைக் கதை: "ஒருவன் விதைகளை கூடையில் எடுத்துக் கொண்டு, வயலில் விதைப்பதற்காகச் சென்றான்.
விதைப்பவனும் விதையும்!
Published on
Updated on
1 min read


வேதாகமத்தில் இயேசு கூறிய உவமைக் கதை: "ஒருவன் விதைகளை கூடையில் எடுத்துக் கொண்டு, வயலில் விதைப்பதற்காகச் சென்றான். சில விதைகள் வழியில் விழுந்து, போவோர் வருவோரின் காலில் மிதியுண்டது. பறவைகள் வந்து அவற்றைக் கொத்திச் சென்றன. 
அவன் மலைப்பாதையில் செல்கையில், சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன. அது முளைத்தது. ஆனால், ஈரமில்லாத காரணத்தால் காய்ந்து போனது. சில விதைகள் முள் செடிகளின் அருகில் விழுந்தன. முள்செடியோடு கூடவே இவையும் வளர்ந்து வந்தன. ஆனால், முள் செடிகளின் நெருக்கத்தினால் சரியாக வளர முடியவில்லை.  
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து, ஒன்றுக்கு நூறாகப் பலன்களைக் கொடுத்தன!' என்றார் இயேசு. 
இதனைச் சொல்லி விட்டு, "காதுள்ளவன் இதைக் கேட்கக்கடவன்!' என்று சப்தமிட்டுக் கூறினார். 
அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்திலே கேட்டார்கள். அதற்கு அவர்: "தேவனுடைய ராஜ்ஜியத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. விதை என்பது தேவனுடைய வசனம். போகும் வழியில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் இறைவனை விசுவாசித்து இரட்சிக்கப்படாத வகையில் சாத்தான் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள், கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, சோதனைக் காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள். முள் செடி அருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள். ஆனால், கவலைகளாலும், ஐஸ்வர்யத்தினாலும், சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாமல் போய்விடுகிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடன் பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்! (லூக்கா 8.5-15).
இவ்வுவமையில் இயேசு "அநேகர் தேவனுடைய வார்த்தையைக் கேட்கின்றனர். ஆனால் அதன்படி நடப்பவர் ஒரு சிலரே. பிறர் பாவத்திற்கு இடமளித்து தேவ வார்த்தையை விட்டு விடுகின்றனர்' என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com