சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

News image
Updated On :4 மார்ச் 2022, 10:42 am

தினமணி

கும்ப ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் துணிந்து தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கும். ரகசியமாக பல திட்டங்களைத் தீட்டி புதிய மாற்றங்களுக்கு அடிகோலுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளையும் முன்னெச்சரிக்கையுடன் புரிந்துகொண்டு காரியமாற்றுவீர்கள். 

சாதாரண விஷயங்களுக்குக் கூட உங்கள் துறையில் உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பீர்கள். இதனால் எந்த காரியத்திலும் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்றப்படுவீர்கள். கடினமான உழைப்புக்கு நடுவில் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். உணவு விஷயங்களிலும் கவனமாக கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள். 

குடும்பத்திலும் நிம்மதி நிறையும். குடும்பத்தினர், பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோர் உங்கள் அனைத்து விஷயங்களிலும் உதவிகரமாக இருப்பார்கள். தேக ஆரோக்கியத்திலும், மன வளத்திலும் கவனமாக இருப்பீர்கள். யோகா, தியானம், பிராணாயாமம் போன்றவற்றையும் கற்றுக் கொள்வீர்கள். புதிய விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் மனச் சஞ்சலங்களிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். உங்கள் வேலைகளை சிறிய தாமதத்துடன்தான் செய்து முடிக்க வேண்டி வரும். மற்றபடி செய்தொழிலில் பின்னடைவு என்று எதுவும் ஏற்படாது. நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும். 

குடும்பத்தில் இன்பம் நிறையும். குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகளும் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். தன் வலிமை, மாற்றான் வலிமை ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து காரியங்களைச் செய்து வெற்றியடையும் காலகட்டமிது. 

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்யும் தர்ம காரியம் உங்களுக்கு மன அமைதி, கெüரவத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். நீண்டகால சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தோருக்கு திருமணம் கைகூடும். இல்லத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குடும்பத்தினர் உங்களைப் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஓய்வு நேரத்திலும் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். 

எடுத்த காரியத்தை நன்றாகச் செய்து முடித்து விட்டுத்தான் மற்ற காரியங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் செயலாற்றுவீர்கள். இல்லத்தில் சடங்குகள், ஹோமங்கள், புனித நிகழ்ச்சிகளை நடத்தும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் லாபம் கூடும். பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.  

விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுத்து விவசாயத்தில் நல்ல அபிவிருத்தி காண்பீர்கள். கையிருப்புப் பொருள்களின் மீது அக்கறை செலுத்தவும்.  

அரசியல்வாதிகள் மனதில் புதிய நம்பிக்கை துளிர்விடும். கட்சியிலுள்ள பல பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். 

கலைத்துறையினருக்கு சமூகத்தில் மதிப்பு உயரும். செயலில் புதிய உத்வேகம் பிறக்கும். நீண்ட கால முயற்சிகள் தற்போது நல்ல பலனைத் தரும். பெண்மணிகள் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து நடத்திச் செல்வீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகள் மேம்படும்.  

மாணவமணிகள் செய்கின்ற பயிற்சிகளின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் உருவாகும். மறைமுகத் திறமைகள் வெளிப்படும். உயர்கல்வி கற்பதற்கான முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.