கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஹரித்வார் கங்கா புஷ்கரம்!

நதிகளைப் போற்றி வணங்கப்படும் புஷ்கர விழா ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயரும்பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஜனவரி 2023, 11:13 am

எஸ். வெட்கட்ராமன்


நதிகளைப் போற்றி வணங்கப்படும் புஷ்கர விழா ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயரும்பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுகிறது. கோடிக்கணக்கான தீர்த்தங்களுள், நம் புராணங்கள் புஷ்கர விசேஷத்தை ஒரு 12  புனித நதிகளுக்கு பிரத்தியேகமாக நிர்வகித்துள்ளது சிறப்பு. 

மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதா, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனா, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரவருணி, தனுசு - பிரம்மபுத்ரா, மகரம் - துங்கபத்ரா, கும்பம் - சிந்து, மீனம் - ப்ரணீதா.

குரு பெயர்ச்சி: திருக்கணித பஞ்சாங்கக் கணிப்பின்படி இவ்வாண்டு (சோபகிருது)  சித்திரை 9-ஆம் தேதி (ஏப்ரல் 22) சனிக்கிழமை காலை 9.41 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். மேஷ ராசிக்குரிய கங்கை நதிக்கரையில், ஹரித்வார் திருத்தலத்தில் புஷ்கர விழா நடைபெறவிருக்கிறது. 

அனுகூலம் பெறும் ராசிகள்: மிதுனம்,  சிம்மம், துலாம்,  தனுசு,  மீனம்.

பரிகாரம் செய்து பலன் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம். 

ஆதிபுஷ்கரம்: குரு பெயர்ச்சி காலத்தில் குரு பகவான் அந்தந்த ராசிக்குரிய தீர்த்தங்களில் ஆண்டு முழுவதும் வாசம் செய்யும், முதல் 12 நாள்கள் ஆதிபுஷ்கரம் என்றும் கடைசி 12 நாள்கள் அந்திம புஷ்கரம் என்றும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. ஆதிபுஷ்கர புண்ணிய காலத்தில் அனைத்து நதி தீர்த்தங்களுக்கும் அதிபதியான பிரம்மா உட்பட மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் வந்து நீராடி மகிழ்வதாக புராணங்கள் வாயிலாக அறியப்படும் செய்தியாகும். அந்த நாள்களில் யாத்திரை மேற்கொண்டு புனித நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும்.

அவ்வமயம் நதிக்கரையில் செய்யப்படும் பல்வேறு தானங்களுக்கும், தர்ப்பணம் முதலிய பித்ருக்கள் வழிபாட்டுக்கும்,  நடைபெறும் யாகங்கள், பூஜைகள், காம்யார்த்த ஹோமங்களில் பங்கேற்பதும்அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

இவ்வாண்டு மேஷ ராசி குருபெயர்ச்சிû யமுன்னிட்டு, கங்கை நதியில் குரு பகவான் வாசம் செய்யும் முதல் 12  நாள்கள் (ஏப்ரல் 22 முதல் மே 3 வரை) ஆதிபுஷ்கர புண்ணிய காலமாகக் கருதப்படுகிறது.

கங்கை நதிச் சிறப்பு:  கங்கை யாத்திரை ஒரு புனிதமான சடங்காகக் கருதப்படுகிறது. புராணங்களின்படி, பகீரதன் என்ற அரசனால் கொண்டு வரப்பட்டதால் பாகீரதி என்ற பெயரும் கங்கைக்கு உண்டு. கங்கை நதி பாயும் வாரணாசி,  ஹரித்வார், கான்பூர், அலகாபாத் உள்ளிட்ட பல நகரங்கள் புனிதத் தலமாக விளங்குகிறது. 

"ஹரித்வார்'  தல சிறப்பு: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 4 புனித தலங்களான சார்தாம் எனப்படும் பத்ரிநாத்,  கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கு  ஹரித்வார் நுழைவாயிலாக உள்ளது.  (}த்வார் } துவாரம் என்றுபொருள்).  ஹரித்வார் அருகில் பல முக்கிய சிவ, வைணவக் கோயில்கள் உள்ளன.  இதன் மற்ற பெயர்கள்:}கபிலாஸ்தானம், கங்காத்வார், மாயாபுரி போன்றவை.

புஷ்கர விழா:  சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியத்தை அமைப்பாளராக கொண்டு செயல்படும் குழுவினரே ஹரித்வார் கங்கா புஷ்கரத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பல்வேறுஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் ஆகியோர்ஆசிகளுடனும்,  உத்தரகண்ட் அரசுஅதிகாரிகள் ஒத்துழைப்புடனும், நடைபெறும் இந்தப் புஷ்கர விழா ஏப்ரல் 21}இல் கொடியேற்றத்துடன் துவங்கு
கிறது.  விழாக்காலங்களில் நாகஸ்வர இன்னிசை, திருமறை, வேதபாராயணங்கள், ஹோமங்கள், கங்கா நதி தீர்த்தவாரி,  ஆரத்தி போன்றவை நடைபெறும்.

நடைபெறும் இடம்:  ஹோமங்கள்} காஞ்சி காமகோடி மடத்து மகர்வாகினி கங்கா தேவி கோயில்.  தீர்த்தவாரி,  ஹாரத்தி} பழமையான ஹரித்வார்பிர்லாகாட்' சென்னையிலிருந்து தில்லிக்கு ரயில், விமானம் அங்கிருந்து ஹரித்வார் செல்லலாம்  (அல்லது)  சென்னையிலிருந்து நேரடியாக டேராடூனுக்கு விமானத்தில் சென்று 35 கி.மீ. தூரத்தில் உள்ள ஹரித்வார் செல்லலாம் டேராடூனுக்கு ரயில் வசதியும் உண்டு. 

தொடர்புக்கு: 9840053289, 9962019172. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.