12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன.05 - ஜன.11) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜன.05 - ஜன.11) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பணப் பற்றாக்குறை ஏற்படாது. எதிர்பார்த்திருந்த உதவிகள் தேடி வரும். தொழிலில் புதிய ஆர்டர்கள் குவியும். சொத்துகளில் நிலவிய பிரச்னைகள் தீரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். 

வியாபாரிகள் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சியில் இறங்குவீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் ஒதுங்கி இருப்பீர்கள்.  கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். 

பெண்களுக்கு குடும்பத்தினரின் மீது பாசம் அதிகரிக்கும். மாணவர்களின் கவலைகள் நீங்கும்.

சந்திராஷ்டமம் - ஜன. 8, 9.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். தொழிலில் உயர்வைக் காண்பீர்கள். குழந்தைகள் இணக்கமாக இருப்பார்கள். அநாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். 

வியாபாரிகள் தனித்தன்மையை வெளிப்படுத்தி வெற்றியைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளின் திடீர் முயற்சிகள் சாதகமாக அமையும். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜன. 10, 11.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். தொழிலை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை சிக்கனமாக செலவு செய்து சேமிக்கவும்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளில் பங்கு கொள்வார்கள். வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சமாளிப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள்.  கலைத் துறையினர்  புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள்.

பெண்கள் உறவினர்களை அனுசரித்து  நடப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியம் சீராகத் தொடங்கும்.  குடும்பத்தில் வைத்தியச் செலவு உண்டாகாது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோயில் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் சிறிது தாமதம் காண்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர் உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலில் இருந்து விடுபடுவீர்கள். 

கலைத் துறையினர் எடுத்த காரியங்களைத் தடை இல்லாமல் முடிப்பீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

திட்டமிட்டபடி தொழிலை நடத்துவீர்கள்.  எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய பதவிகளைப் பெறுவீர்கள். பகைமை பாராட்டியவர்கள் நட்புடன் பழகுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் தீரும். 

வியாபாரிகள் வெளியூர் செல்வீர்கள்.  விவசாயிகள் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பீர்கள். அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். கலைத் துறையினர் நம்பிக்கையுடன்  காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். 

பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவர்கள் மூத்தோர் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலை மேன்மை அடையும். போட்டிகளால் பாதிப்பு இராது. பங்கு வர்த்தகத்தில்  வருமானம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் அக்கறை செலுத்துவீர்கள். 

கலைத் துறையினர் பிறருக்கு உதவுவார்கள்.  பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பார்கள்.  மாணவர்கள் புதிய பாடங்களை விரும்பி படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தினரின் மனம் கோணாமல் நடப்பீர்கள். தொழிலில் போட்டிகள் இருக்காது. சூழ்நிலைகளைப் புரிந்து நடப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.  விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவார்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் கணவரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.  புதிய அனுபவம் கிடைக்கும். அரசு அலுவலர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  எதிரிகளின் இடையூறுகளை எதிர்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடப்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணியை செய்து முடிப்பீர்கள்.  கலைத் துறையினர் பெயரைத் தக்க வைப்பீர்கள்.

பெண்கள் குடும்ப நிலையை புரிந்துகொள்வீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பலவகைகளில் பணவரவுக்கு வழி செய்வீர்கள். வேலையைத் தடையில்லாமல் முடிப்பீர்கள்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும்.  மனதுக்கினிய பயணம் மேற்கொள்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும்.

விவசாயிகள் பழைய கடன்களை அடைப்பீர்கள். அரசியல்வாதிகள் புதிய தீர்வுகளைக் காண்பீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவி செய்வீர்கள்.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நேர்வழியில் சிந்திப்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.  நிலையான வருவாய்க்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

பெரியோர் ஆசியைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துவைப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணைவீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை ஏற்பீர்கள்.  பெண்களின் உடல் நலம், மனவளம் சிறக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மனதில் தெளிவு பிறக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள்.  தடைபட்ட காரியங்களை நடத்துவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் கொடுக்கப்பட வேலைகளை தள்ளிப் போடாமல் முடித்து விடுவீர்கள்.  வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

விவசாயிகள் மானியங்களைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் எதிரிகளும் நன்மையடைவார்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் பிறரால் பாராட்டப்படுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நெடுநாளைய எண்ணங்கள் ஈடேறும்.  பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். புதிய சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.  எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் - ஜன. 5, 6, 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com