

ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவம் நம்மை இயக்கும் சக்தியே கோயில்களில் வெளிப்படுகிறாள். அந்தச் சக்தியைத் தரிசிப்பதே பிறந்ததன் பயன் என்பதுதான் அம்மனைத் தரிசிப்பதன் தத்துவமாகும் .
ஆடி மாதத்தில் அம்மன் சக்திக்குள் சிவன் அடக்கமாகி விடுகிறார் என்பதால், கோயில்களில் திருவிழாக் கோலம்தான். ஆடியில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களும் அம்மனை வணங்குவதற்குமான அற்புதமான நாள்கள். வெள்ளிகளில் மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேசுவரியை, மகாலட்சுமியை அலங்கரித்து வழிபாடு செய்தால் வளங்கள் தடையில்லாமல் வந்து சேரும்.
அம்மன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்கிரன் அனுக்கிரகத்தால் செல்வ வளம் பெருகும். தீமிதி நடக்கும் கோயில்களில் விரதமும், கைக்காப்பு கட்டுவதும் பழக்கமாகும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலான கோயில்களில் பால்குடம், லட்சார்ச்சனை, கூழ் ஊற்றுதல், பூச்சொரிதல், பூக்குழி போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
சுமங்கலியாகவோ, கன்னியாகவோ காலமானவர்களைச் சாந்தப்படுத்தி, அவர்களுடைய ஆசியைப் பெறுவதற்காகவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜித்து படையலிடுவர். இதனால் செல்வத் தட்டுப்பாடு குறையும். சுமங்கலிக்கோ கன்னிகளுக்கோ ஆடைகளை வழங்கிட முன்னோர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
வீடுகளில் முதல் வெள்ளியன்று இனிப்பு, தேங்காய் கொழுக்கட்டை, உப்பு} காரப் பருப்பு, எள் கொழுக்கட்டை, சுண்டல், வெற்றிலை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
குலதெய்வம் வேறு ஊரில் இருந்தாலும் வீட்டிலேயே வெள்ளிக்கிழமைகளில் குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வப் புகைப்படத்தைப் பூஜித்து, வழிபடலாம்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையைத் துவங்கி குலதெய்வ வழிபாட்டுப் பாடல்களையோ, அம்மன் பாடல்களைக் கொண்டு வழிபாடு மேற்கொள்ளலாம். குல தெய்வக் கோயிலுக்குச் செல்லும்போது, சமர்ப்பிக்க காணிக்கை முடிந்து வைக்கிறார்கள்.
தொழில் மேன்மை அடைய திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும், குடும்பம் முன்னேற்றமும் அடைய இந்த மாதம் உகந்ததாகும். வீட்டில் சுப காரியங்கள் விரைவில் நடைபெற ஆடி வெள்ளிக்
கிழமைகளில் அம்பிகையை வழிபட்டால் அனைத்து காரியங்களும் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகமாகும். சில குடும்பங்களில் முதல், மூன்று, ஐந்தாவது வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து வழிபடும் பழக்கம் உண்டு.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு புத்தாடை அல்லது துவைத்து மடியாடை அணிந்து பசுஞ்சாண பிள்ளையார் பிடித்து செம்பருத்தி செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து சூரிய உதயத்துக்கு முன் விநாயகரைப் பூஜை செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உணவு அளித்து, அவர்களுக்கு ஆடைகள், மங்கலப் பொருள்களைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். புற்று அம்மன், நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்வது விசேஷம்.
ஆடி வெள்ளிகளில் ஸ்ரீ செüந்தர்ய லகரி, லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் , "தேவி மகாத்மியம்' படிப்பதும் நடைபெறுகின்றன. குடும்பத்தை இருளில் இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். "கனகதாரா ஸ்தோத்திரம்' பாராயணம் செய்து, வீட்டில் உள்ள அம்பாள் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்வதும் நன்மைகள் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17}இல் பிறக்கிறது. ஜூலை 19, 26, ஆகஸ்ட் 2, 9, 15 ஆகிய ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஆக. 9-இல் கருட பஞ்சமி, நாக பஞ்சமி வருவதால், அந்த நாள்களில், புற்றுக்குப் பால் தெளித்து வழிபடுவது நாகதோஷம் நீக்கும். ஐந்தாவது வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு வருவதால் அன்று பகலில் லட்சுமி பூஜை செய்தும், திருமங்கல்ய சரடு மாற்றிக் கொள்ளுவதும் மாலையில் விஷ்ணு கோயில்களில் தனிக்கோயில் தாயார் சந்நிதிகளில் வழிபாடு செய்வதும் வணங்குவதும் குறைகள் நீங்கி நலம் வளர மென்மேலும் விருத்தியடையும்.
இரா. இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு வருடப்பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

யுகாதி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

யுகாதி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி: பரமத்தி வேலூா் பகுதி பைரவா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

