திருமலை திருப்பதி ஏழுமலையானை அதே உருவில் மூலவராகத் தரிசனம் செய்யும் தலம் திருமலைவையாவூர்.
பசுக்களை முன்னையகோன் என்பவர் மேய்க்கும்போது, ஒருநாள் மலையில் பெரிய கற்பாறையைக் கண்டான். அது அவனுக்கு பெருமாளாகத் தெரியவே தன்னுடைய மனைவி பிராட்டிகோன் கொண்டுவரும் கேழ்வரகுக் கூழை முன்னே வைத்து நிவேதனம் செய்வான். அவனது
பக்தியை கண்ட பெருமாள் மாறுவேடத்தில் தோன்றி, ""பிருகு மகரிஷியின் மலைக்குச் சென்று கொண்டிருந்தேன். தொலைவி
லிருந்து உங்கள் உருவம் தெரிந்தது . நற்குலத்தில் பிறந்த நீ பகவானுக்கு கூழ் நைவேத்தியம் செய்கிறாய். இருந்தாலும் உன் உழைப்பால் உருவான சுத்தமான, பால் நைவேத்தியம் செய்து வழிபடு'' என்றார். அன்று முதல் முன்னையகோன் , பால் நெய், இறுதியில் கூழையும் நிவேதனம் செய்து பூஜைகளைச் செய்து வந்தான்.
மீண்டும் நேரில் தோன்றிய பெருமாள், ""உனக்கு வேண்டும் வரம் என்ன?'' என்று கேட்டார். ""நீங்கள் இங்கேயே நிரந்தரமாக நித்யவாசம் செய்து வேங்கடவனாக அருள்புரிய வேண்டும்'' என வேண்டினான். இதன்படி, பெருமாள் எழுந்தருளினார்.
ராமாயணப் போரில் லட்சுமணன் மாயத்தால் மயக்கமுற்று வீழ , ராமன் சொற்படி அனுமன் சஞ்சீவிமலையை வேரோடு பெயர்த்து கைகளில் சுமந்து தூக்கி வந்தார். மலையைத் தனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றும்போது, அதிலிருந்து சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி விழுந்தது, , மலையை வைக்காமல் மலையே உருவானதால் வையாவூரானது . சஞ்சீவி பர்வதத்தின் பகுதி குவிந்து மலையாக இருந்த இடம் "மலைவையாவூர்' ஆனது . இது "திரு' என்னும் அடைமொழி சேர்த்து "திருமலைவையாவூர்' என அழைக்கப்படலாயிற்று.
இந்நிகழ்வுகள் பரவிட மக்கள் வரம் தரும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை வணங்கி அருள் பெற்றனர்.
காலச்சக்கர நகர்வில் 1256}ஆம் விஜயநகர சாம்ராஜ்யத்தில் முகலாயப் பேரரசர் அக்பருடன் இருந்த ராஜா தோடர்மால் திருப்பதிக்கு திருப்பணிகளைச் செய்தார். ஒருநாள் ராஜாவின் கனவில் திருமால், ""பர்வதத்தின் உச்சியில் கோயில் அமைந்திருப்பதுபோல, பர்வதத்தின் மற்றொரு பாகத்திலும் கோயில் எழுப்பு. அங்கிருந்தும் பூலோகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்டுள்ளேன்'' என்றார்.
வாகனப் பாதையும், படிகளும் வராக புஷ்கரணியும் கொண்ட இம்மலையின் இறைசக்தியைக் கேட்டு ராஜா தோடர்மால் தரிசிக்க வந்தபோது. முன்னைய கோன், பிராட்டிகோன் பணியை அறிந்து கோயில் முழுவதையும் கருங்கல்லால் கட்டி பெருமாளின் திருமுன்பு "பேசும்பெருமாளை' சதா சேவை செய்யும் வகையில் கிடத்தினான். பெருமாளை தான் தினமும்
வணங்கும் வகையில் தன் விக்ரகத்தை அஞ்சலியுடன் கோயிலில் நிறுவினான். ராஜாதோடர்மாலுக்கு இங்கு மட்டுமே விக்ரகம் உண்டு.
மூர்த்தி, தலம், தீர்த்தத்தால் திருமலையாகவே விளங்கும் தலம் இது. ஆதிவராகர் ஸ்தலாதிபதியாதலால் பிரதான மூர்த்தியான லட்சுமி வராகர் சந்நிதிக்கு எதிரில் கொடி மரம் அமைந்து இவருக்கே முதல் தீபாராதனை நடக்கிறது. பிரசன்ன வெங்கடேசர் உற்சவத்தில் கூட, இவரது சந்நிதியில் தான் கொடி ஏற்றப்படும்.
சக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீராமானுஜர் மதுராந்தகம் செல்கையில் இப்பெருமாளை கண்டு வணங்கி ஆசி பெற்றுச் சென்ற தகவல்கள் உண்டு.
கருவறையில் பெருமாள் செங்கோலுடன் ராஜஅலங்காரத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை, அஷ்டலட்சுமி ஆரம், ஸ்ரீலட்சுமி ஆரம், தசாவதார மாலை, ஒட்டியாணம் அணிந்து ஆதிசேஷன் குடை பிடிக்க காட்சி தருகின்றார் . இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர்.
மூலவருக்கு ஆதிசேஷன் குடைபோல் கவிழ்ந்து காட்சி தருகிறார். இத்தலம் "தென் திருப்பதி' எனப்படுகிறது .
1400 ஆண்டுகள் தொன்மையான திருமலை வையாவூர் அலர்மேல் மங்கா உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பரிவாரமூர்த்திகளுக்கு ஜூன் 17}இல்
சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது. இந்தக் கோயில் செங்கல்பட்டிலிருந்து படாளம் கூட்டுரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
விவரங்களுக்கு 9443239005; 9994095187.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

திருநீறு அணிந்து காட்சிதரும் பெருமாள்!
கால சர்ப்ப தோஷம் போக்கும் ஆதிகேசவ பெருமாள்! ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

மண்குன்றுமலை பெருமாள் கோயில் புனரமைப்பு பணி: கிராம மக்கள் கோரிக்கை
வீடியோக்கள்

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

