மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்!

இந்த வாரம் யாருக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சிக்கலாம்.
மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 8 - மார்ச் 14) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறக்கும். உடனிருப்போரின் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் முழு கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் வரவு-செலவுக் கணக்குகளை முறையாகப் பராமரிப்பீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சலில் உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் தங்களது திட்டங்களை எவரிடமும் வெளிப்படுத்த மாட்டீர்கள். கலைத் துறையினருக்கு பழைய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

திட்டமிட்ட செயல்கள் தாமதமாக நடக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மனக் குழப்பம் நீங்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டுத் தொழிலால் முன்னேற்றம் அடைவீர்கள். விவசாயிகள் பிறருக்கு உதவி செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். மாணவர்கள் அறிவுசார் விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். திடீர் வெளியூர் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தீயவர்களின் நட்பை விலக்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். வியாபாரிகள் புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். விவசாயிகள் நீர்வளம் பெருக அதிகம் உழைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடக் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினர் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் பெற்றோரை மதித்து நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 8.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பண வரவு சுமாராக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சுமுகமாக முடியும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வீர்கள். வியாபாரிகள் தங்கள் பொறுப்புகளைச் சரிவர ஆற்றுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க முயற்சிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைத் திறமையுடன் கையாள்வீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வளர்ப்பீர்கள். பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 9, 10.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். பொருளாதாரத்தில் வளர்ச்சி கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.

வியாபாரிகளுக்கு விற்பனை நல்ல முறையில் நடைபெறும். விவசாயிகளுக்கு பாசன வசதியில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள்.

கலைத் துறையினருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெற கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - மார்ச் 11, 12.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியோர் ஆசி கிடைக்கும். புதிய சேமிப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கூடும்.

வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். அரசியல்வாதிகள் முயற்சிக்கேற்ப பலன்களைப் பெறுவீர்கள்.

கலைத் துறையினருக்கு பிறர் உதவிகரமாக இருப்பார்கள். பெண்களுக்கு தந்தைவழியில் சொத்துகள் கிடைக்கும். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 13, 14.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தோரைச் சந்திப்பீர்கள். உடன்பிறந்தோருடன் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டு சேர்ந்து வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் பூச்சிகொல்லி மருந்துக்கு செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் சூழ்நிலையை அறிந்து பேசுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க ஆர்வம் காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பப் பிரச்னைகள், குழப்பங்கள் குறையும். தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். கோயில்களுக்குச் சென்றுவருவீர்கள். எதிர்ப்புகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளின் குத்தகை பாக்கி வசூலாகும்.

அரசியல்வாதிகள் ரகசியங்களை யாருடனும் பகிர வேண்டாம். கலைத் துறையினர் பிறரை மதித்து நடப்பீர்கள். பெண்கள் உற்சாகமாய் இருப்பீர்கள். மாணவர்களின் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கடன்கள் வசூலாகும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உறவினர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகளை மாற்றுக்கட்சியினரும் மதிப்பார்கள். கலைத் துறையினருக்கு சிறிது கஷ்டம் உண்டாகும். பெண்கள் பெரியோர்களை அனுசரித்து செல்லவும். மாணவர்களின் விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நேர்மையாக நடப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பைப் பெறுவீர்கள். போலியானவர்களை விலக்கி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

வியாபாரிகள் புதிய பொருள்களில் முதலீடு செய்வீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்கள் மௌனமாக இருந்து காரிய மாற்றுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பேச்சிலும் செயலிலும் விவேகம் கூடும். சுபநிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு உண்டு. உடனிருப்போர் நேசக்கரம் நீட்டுவர். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டிவரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் அனுகூலம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் திட சிந்தனையுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினரின் திறமை பளிச்சிடும். பெண்கள் சமுதாய முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய வாகனத்தை வாங்குவீர்கள். சரியாகத் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். உடல் சோர்வும் மனக் குழப்பமும் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டிவரும். வியாபாரிகள் போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் சந்தோஷத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் பெற்றோரின் அரவணைப்பில் நெகிழ்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com