வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

வார பலன்கள்
dps

வார பலன்கள்
dps
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 20 - 26) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
தொழிலில் சிந்தித்துச் செயல்பட்டு இலக்குகளை எட்டுவீர்கள். புதிய நுட்பமான விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய கடன்கள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் கச்சிதமாக முடிவடையும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் கணவனைப் புரிந்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். தொழிலில் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் அதிகரிக்கும். விவசாயிகள் கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்துமுடித்துவிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் பயனற்ற விவாதங்களைத் விர்த்துவிடுவீர்கள். கலைத்துறையினருக்கு துறையில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்கள் கணவர் குடும்பத்தினருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். மாணவர்கள் அனைவரிடமும் நற்பெயரெடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உற்றார் உறவினர்கள் உதவுவார்கள். சில பிரச்னைகளில் தெளிவான முடிவெடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மேன்மையைக் காண்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமான உறவு வைத்துக்கொள்வீர்கள். விவசாயிகள் பால் வியாபாரம் செய்து, கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துடன்அனுசரணையாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். பெண்கள் குழந்தைகளுக்காக சிறிது செலவு செய்ய நேரிடும். மாணவர்கள் விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். கடினமாக உழைப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் போட்டியாளர்களை நல்லமுறையில் எதிர்கொள்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின்ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவைப்பெறுவீர்கள். பெண்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பயணங்களால் பயன் உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் கரிசனத்துடன் நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி சில விஷயங்களை ஒப்படைப்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய தொண்டர்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் வருமானத்தின் ஒருபகுதியை ரசிகர் மன்றத்துக்குச் செலவு செய்வீர்கள்.
பெண்கள் கணவர் குடும்பத்தினரிடம் சுமுகமாக உறவை வைத்துக்கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 20.
பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கிடைத்த பதவி உயர்வில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிவரும். வியாபாரிகள் விழிப்புடனிருந்து வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைகளை நல்லபடி முடித்துக்கொடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப்பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களின் கோரிக்கைகளை கணவர் நிறைவேற்றுவார். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 21, 22.
தொழிலில் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் கூடும். பேச்சில் கண்ணியம் காப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவாக இருந்து பணியாற்றுவீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கல் சீராக நடந்தேறும். விவசாயிகளின் தன்னம்பிக்கை பலப்படும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தைக் கவருவீர்கள். கலைத்துறையினரின் செயல்பாடுகள் சீரிய முறையில் இருக்கும். பெண்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முழு ஈடுபாட்டைக் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 23, 24.
தொழிலை நேர்வழியாக நடத்துவீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பயணங்களைச் செய்வீர்கள். வியாபாரிகள் விலையைக் குறைத்து விற்காத பொருள்களை விற்பீர்கள். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் பாதிப்பு எதுவுமே ஏற்படாது.
அரசியல்வாதிகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல் திட்டங்களை மாற்றிக் கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய வருவாயைப் பெறுவீர்கள்.
பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மார்ச் 25, 26.
புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அரசு உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்குப் பண உதவிகளைச் செய்ய நேரிடும். வியாபாரிகள் எதிர்பார்த்த விற்பனையை எட்டுவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபம் அதிகரிக்கக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்கள் சரியான நேரத்தில் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர் புதிய கலை நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள்.
பெண்கள் பேச்சைக் குறைத்து செயல்களைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவர்கள் உழைப்பைக் கூட்டிக்கொண்டு நல்ல
படியாகத் தேர்வுகளை எழுதுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உங்கள் கடமைகளை சரியாகச் செய்வீர்கள். உங்கள் உடல் உழைப்பு வீண் போகாது. வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்ப வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடினமாக உழைத்து நற்பெயரெடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கடன்கள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் விவேகமாகப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் மகிழ்ச்சி தரும் ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வீட்டிலும் வெளியிலும் உங்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும். எதிர்காலத்துக்காகச் சேமிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் பொறுமையுடனும் பொறுப்புடனும் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் உங்களை குறை கூறும் சக கலைஞர்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். பெண்கள் குடும்பப் பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள்
சக மாணவர்களுக்கு கல்வியில் உதவி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் வேலைகளை சக ஊழியர்கள் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கடையை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் பயனடைவீர்கள்.
அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் கெளரவப்படுத்தும். கலைத்துறையினர் முக்கிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பெண்கள் பெற்றோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மாணவர்கள் தங்கள் குறைகளைத் திருத்திக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...