

புகழ்பெற்ற திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலை அறிந்த பலரும் அதற்குப் பின்னே சற்றுத் தொலைவில் அமைந்திருக்கும் ஆலத்தூர் எறும்பீஸ்வரர் கோயிலை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நல்ல பதவி கிடைப்பதற்கும், கிடைத்த பதவியை முழுமையாக அனுபவிப்பதற்கும், ஏற்றமான வாழ்வு அமைவதற்கும், புது உறவுகள் உருவாவதற்கும் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் அருள் தேவை. இதை நமக்கு அருளிடும் ஈசன்தான் ஆலத்தூர் எறும்பீசர்.
புராண காலத்தில் கரன் மற்றும் தூஷணன் என்கிற இரு அசுரர்கள் மூவுலகத்தையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு அட்டகாசம் செய்தனர். அசுரர்களுக்குப் பயந்து நாலாபக்கமும் சிதறி ஓடிய தேவர்கள், அசுரர்கள் கண்ணில் படாது பத்திரமாக மறைந்திருக்க வேண்டி, சிறு எறும்புகளாக மாறி ஓரிடத்தில் கூடியிருந்து சிவபெருமானை நோக்கி அபயம் அருளும்படி கடும் தவம் செய்தனர்.
இப்படி தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி எறும்பு வடிவத்தில் தவமியற்றிய தலமே ஆலத்தூர். ஆதியில் ஆலமரங்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியாதலால் ஆலத்தூர் என்கிற காரணப்பெயர் உண்டாயிற்று. வடமொழியில் வடாரண்யம். வடம் } ஆலமரம்; ஆரண்யம் } காடு. எனவே இந்த ஆலங்காட்டு ஈசருக்கு வடாரண்யேஸ்வரர் என்பது திருநாமம். ஆயினும், சாப விமோசனத்துக்காக எறும்புகள் வழிபட்டமையால் பிப்பீலிகேஸ்வரர் என்கிற திருநாமம் உண்டாயிற்று என்கிறது தலபுராணம்.
பிப்பீலிகம் என்றால் எறும்பு. எனவே எறும்புகள் வழிபட்ட இந்த ஈசருக்கு பிப்பீலிகேஸ்வரர் அல்லது எறும்பீஸ்வரர் என்பதும்; இவருடன் அருளும்
அன்னைக்கு செüந்தரநாயகி என்பதும் திருநாமம்.
எறும்புகளுக்கு அருள் செய்த இந்த இறைவனுக்கு பிற்காலத்தில் கோச்செங்கட்சோழ மாமன்னரால் மிகப்பெரிய மாடக்கோயில் எழுப்பப்பெற்றது. ஆனால், காலப்போக்கில் இக்கோயில் அழிந்துவிட, விஸ்தாரமாக உள்ள மையக்கோயில் புனரமைக்கப்பட்டு வழிபாடுகள் முறையாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இக்கோயிலில் அருளும் ஈசன் பதவி தரும் இறைவனாகப் போற்றப்படுகிறார். தேவர்கள் தாங்கள் இழந்த பதவியைப் பெற வேண்டி வழிபட்ட தலம் இது. எனவே இத்தலத்துக்கு வந்து முறையாக சிவபெருமானை வழிபடுபவருக்கு உயர்ந்த பதவிகள் கிடைத்திடும் என்பது ஐதீகம். பதவி இழந்து வாடுபவர்களும் இத்தலத்து ஈசனை வழிபட இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம்.
ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் செய்யப்படும் சோமவார வழிபாடு இவ்வாலயத்தில் விசேஷம். திங்கள் கிழமைகளில் அதிகாலையில் நீராடி தூய்மையான ஆடை உடுத்தி இவ்வாலயத்து எறும்பீஸ்வரருக்கு நிகழ்த்தப்படும் விசேஷ அபிஷேகத்தைக் கண்
குளிர தரிசித்தல் சிறப்பானது . அன்றைய தினத்தில் மூலவருக்குச் செய்யப்படும் ருத்ர த்ரிசதி என்கிற விசேஷ வில்வ அர்ச்சனையைக் கண்டு தரிசிப்பது மிகுந்த பலன்தரக்கூடியது.
27 தீபங்களை ஏற்றி வைத்து மனம் உருகி வேண்டியபின் சிவநாமத்தினை மனதார உச்சரித்தபடி கோயிலை வலம் செய்திட வேண்டும். இவ்வாறு ஐந்து சோமவாரங்கள் தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு பதவி உயர்வு, உயர்ந்த வேலை, விரும்பிய பணியிடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் } திருமீயச்சூர் கோயிலுக்கு அருகில் திருப்பாம்புரம் செல்லும் வழியில் ஆலத்தூர் எறும்பீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
- சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சப்தம் முதல் முத்து என்கிற காட்டான் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முத்து என்கிற காட்டான் இணையத் தொடரில் விஜே பார்வதி போஸ்டர்!

இந்த வாரம் கலாரசிகன் - 22-3-2026

செங்கோட்டையில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு
வீடியோக்கள்

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

