வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

இலங்கையில் 1972 முதல் 2009 வரை...

கொழும்பு, மே 18:   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் அழித்து, நீண்டநாள் போருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக இலங்கை ராணுவம் திங

Updated On :20 செப்டம்பர் 2012, 7:52 pm IST

கொழும்பு, மே 18:   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் அழித்து, நீண்டநாள் போருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக இலங்கை ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது.

  இதுபோன்ற நிலையில் இலங்கையில் 1972 முதல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

  1972: சிலோன் என்பது இலங்கை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்த மதத்துக்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

  1976: தனி ஈழம் கோரி போராட "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்' (எல்டிடிஈ) என்ற தனி அமைப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்றுவித்தார்.

  1977 :இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசித்த வடகிழக்கு பகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி அங்கு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

  1981: தமிழர்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்கள் மத்தியில் சிங்களர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது.

  1983: வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

  1985: இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.

  1987: ராணுவம் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தி புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்தது. தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புதிய கவுன்சில்களை அரசு உருவாக்கின. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு வரவழைக்க இந்திய அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது.

  1990 :இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. இதையடுத்து ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.

  1991: சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்பூதுரில் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை விடுதலைப்புலிகள்தான் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  1993: விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இலங்கை அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார்.

  1994 :இலங்கை அதிபராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பேற்றார். அவர் விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினார்.

  2002:நார்வே நாட்டின் முயற்சியால் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

  2004: விடுதலைப் புலிகள் அமைப்பின் கமாண்டராக பதவி வகித்த கருணா, அமைப்பில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று புலிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட ஆரம்பித்தார்.

  2005: புலிகளால் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமணன் கதிர்காமர் கொல்லப்பட்டார்.

  ஜனவரி, 2008:புலிகளுடன் எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த உடன்பாட்டை தன்னிச்சையாக ரத்து செய்தது இலங்கை அரசு.

  ஜூலை, 2008: விடாத்தல் தீவில் புலிகளின் முக்கிய கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக ராணுவம் அறிவிப்பு.

  ஜனவரி, 2009: புலிகளின் தலைநகராகவும், கோட்டையாகவும் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது.

  ஏப்ரல், 2009: புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான முல்லைத்தீவையும் ராணுவம் கைப்பற்றியது

  மே 16,2009: விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவிப்பு

  மே 17, 2009: ராஜபட்ச சொல்வது போல் போரில் தோற்றுப்போகவில்லை என விடுதலைப் புலிகள் அறிவிப்பு.

  மே 18, 2009: பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்பட புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய ஏழு தலைவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.