அடுத்த 3 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஹக்கானியின் சார்பில் அவரது வழக்குரைஞர் அஸ்மா ஜஹாங்கீர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் செüத்ரி தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஹக்கானியின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. அப்போது, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த ஹக்கானி, அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதி மைக் முல்லனுக்கு ஒரு ரகசிய குறிப்பு அனுப்பி இருந்தார். அதில், பாகிஸ்தானில் ராணுவம் மீண்டும் அரசைக் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதால், அமெரிக்கா இதுவிஷயத்தில் தலையிட வேண்டும் என கோரியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஹக்கானி அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார். நாடு திரும்பினால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என ஹக்கானி கூறி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

