தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பாகிஸ்தான் அரசின் போர்நிறுத்த கோரிக்கை: தலிபான்கள் நிராகரிப்பு

பாகிஸ்தான் அரசின் போர் நிறுத்த கோரிக்கையை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

Updated On :11 மார்ச் 2013, 9:45 pm

பாகிஸ்தான் அரசின் போர் நிறுத்த கோரிக்கையை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை ஒடிப்போம் என்று சொல்லிக் கொண்டு, எங்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்தால், பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு, பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்தது. ஆயுதங்களை கீழே போட அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து, பயங்கரவாதிகள் வன்முறையை கைவிடாவிட்டால், பாதுகாப்பு படையினரை கொண்டு அவர்களின் முதுகெலும்பை உடைப்போம் என்று, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற, பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை நாங்கள் நிராகரித்துள்ளோம்.

அண்மையில், நாட்டின் நலன் கருதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் முன் வந்தபோது, நாங்கள் பலவீனம் அடைந்து விட்டதால், பேச்சுவார்த்தைக்கு வருவதாக அரசு கூறியது. எனவே, நாங்கள் பேச்சுவார்த்தை கோரிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டோம்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைப்போம் என்று சொல்லிக் கொண்டு, எங்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்தால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். நிலையான அமைதியை நோக்கி பாகிஸ்தான் சென்று கொண்டிருப்பதால், பயங்கரவாதிகளை வேருடன் அழிக்க, மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று, அமைச்சர் ரஹ்மான் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்த அறிவிப்பை பயங்கரவாதிகள் வெளியிட வேண்டும் என்று கோரும் பொதுமக்கள், பழங்குடிகள் பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படையினரும், அமெரிக்க ஆளில்லா விமானங்களும் நடத்தும் தாக்குதல்களை முதலில் நிறுத்தக் கோரவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.