தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவுத் திறன் குறைந்து வருகிறது என்று அவரின் நெருங்கிய தோழர் ஜார்ஜ் பிúஸôஸ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் மண்டேலாவுக்கு (94) வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவருடன் 1948ஆம் ஆண்டு முதல் நெருங்கிய நண்பராக இருந்து வரும் ஜார்ஜ் பியோஸ் இது தொடர்பாகக் கூறியது: மண்டேலா நலமாக இருக்கிறார். ஆனால், அவரின் நினைவுத் திறன் குறைந்து வருகிறது. நிறவெறிக்கு எதிராக இணைந்து போராடிய சில நண்பர்களின் பெயரை அவர் மறந்து விட்டார். அவர்கள் இறந்து விட்டதும் அவரின் நினைவில் இல்லை என்றார்.
"ஐ விட்னஸ் நியூஸ்' என்ற நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஜார்ஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், "அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு, பொது வாழ்வு, அரசியல் தொடர்பான எந்தப் பிரச்னை குறித்தும் அவர் என்னுடன் விவாதித்தது இல்லை. எந்தப் பிரச்னை குறித்தாவது அவரின் கருத்தைக் கேட்டால், அதிபரைக் கேளுங்கள் என்று கூறிவிடுவார். அதைப் போலவே, தனக்குப் பின் யார் அதிபர் ஆவார் என்பது குறித்தும் மண்டேலா ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை' என்றார் ஜார்ஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










