மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்தில் திருட்டு

தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்திலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Updated On :2 ஜூலை 2013, 4:22 am IST

தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்திலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து யான்ஹப் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:  கொரிய போர் தொடங்கியதன் நினைவுதினமான கடந்த புதன்கிழமை, வட மற்றும் தென் கொரியாவின் இணையதளங்கள் செயலிழந்தன. இந்நிலையில், தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் இணையதளத்தில் ஊடுருவி முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த இணையதளத்தைப் பின்தொடரும் சுமார் 1 லட்சம் பேரின் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன.

இந்த தகவலை அதிபர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்துக்காக அதிபர் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.  இணையதள தாக்குதலில் வடகொரியா ஈடுபட்டதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது.  கடந்த 1950-53ஆம் ஆண்டு வரை கொரிய போர் நடைபெற்றது. அதன் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

எனினும், மறைமுகமாக வட மற்றும் தென் கொரியா இடையே போர் தொடர்கதையாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.