கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்த அதிசயம்

அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், உயிருடன் எழுந்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது தற்போது தெரிய வந்துள்ளது.

Updated On :12 ஜூலை 2013, 12:55 am IST

அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், உயிருடன் எழுந்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது தற்போது தெரிய வந்துள்ளது.

அவருடைய உடல் பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் தயாராக இருந்த நிலையில், அவர் கண்விழித்தார்.

அதிகளவு மருந்து எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் 2009-ம் ஆண்டு கொலின் எஸ்.பர்ன்ஸ் (41) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், முறையாக பரிசோதனை நடத்தாத மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக பர்ன்ஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்களுடன் அனுமதியுடன் பர்ன்ஸின் உடல் பாகங்களை அகற்ற மருத்துவர்கள் தயாரானர். அப்போது அவர் கண் விழித்து உயிர் பிழைத்தார்.

2 வாரங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். எனினும் 16 மாதங்கள் கழித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பர்ன்ஸின் மூளையின் செயல்பாடு குறித்து மருத்துவர்கள் பரிசோதிக்கத் தவறியதே இத்தவறுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த செய்தி, பத்திரிகையாளர்கள் நடத்திய புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து மருத்துவமனையின் அஜாக்கிரதையான செயலை கண்டித்த அமெரிக்க மருத்துவத்துறை, மருத்துவமனை நிர்வாகம் ரூ. 1.32 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இது குறித்து பர்ன்ஸின் தாய் லுசில்லி கஸ் கூறுகையில், மருத்துவமனையில் என்ன தவறு நடந்தது என்பதை மருத்துவர்கள் கடைசி வரை தெரிவிக்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.