சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதை சீன அரசு நியாயப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக வெளியாகி உள்ள செய்தியைப் பார்த்தேன். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என தெரியாது.
சீனா-இந்தியா எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீன எல்லையில் இருந்தபடி ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. எல்லையில் அமைதியான சூழல் நிலவுகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான எல்லை வரையறை தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் வரை, இப்போது உள்ள நிலையை இரண்டு நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும்.
எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார் சுன்யிங்.
கடந்த ஜூன் 17ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள சுமர் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர், அங்கிருந்த கண்காணிப்புப் பதுங்கு குழிகளை சேதப்படுத்தியதுடன், கண்காணிப்பு கேமராக்களுக்கான ஒயர்களையும் வெட்டி எறிந்ததாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சீன ராணுவத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் உள்ள சுமார் பகுதியில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்தனர். பின்னர் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் சீன வீரர்கள், இந்தியப் பகுதியில் இருந்து வெளியேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

