யேமனில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், ஷபவா மாகாணம், பல்ஹஃப் முனையத்துக்கு அருகே உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
காரில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்ஹஃப் முனையத்திலிருந்துதான் யேமனிலிருந்து வெளிநாடுகளுக்கு குழாய் வழியாக எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எரிவாயுக் குழாய்களை தாக்கவும் அல்-காய்தா பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளனர். அதேபோல், ஹத்ரமவட் மாகாணத்தில் உள்ள கனடாவின் மினல்-தபா எண்ணெய் முனையத்தை தாக்கி, ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாடி தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாற்காலிமாக மூடப்பட்டன. யேமனில் உள்ள தூதரகத்தைத் தவிர, மற்ற நாடுகளில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை திறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


