கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அமெரிக்காவில் தாறுமாறாக நடைபாதையில் கார் ஓட்டிய பெண்: ஒருவர் சாவு, 26 பேர் காயம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வேண்டுமென்றே நடைப்பாதையில் காரை ஏற்றிய விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

News image
Updated On :21 டிசம்பர் 2015, 12:01 pm

PTI

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வேண்டுமென்றே நடைப்பாதையில் காரை ஏற்றிய விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 26 பேர் காயமடைந்தனர். பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் அந்த காரை ஓட்டி வந்த விவரம் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

வர்த்தக நிறுவனங்களும், உணவு விடுதிகளும் ஏராளமாக உள்ள லாஸ் வேகாஸ் பகுதி எப்போதுமே மிகுந்த பரப்பரப்பாக இயங்கும். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் இங்கு வந்து செல்வர்.

இந்நிலையில் நேற்று மாலை இங்கு தனது காரில் வந்த 20-வயது மதிக்கதக்க பெண், காரை வேண்டுமென்றே நடைமேடையில் ஏற்றியுள்ளார்.

இந்நிகழ்வை நேரில் கண்ட சுற்றுலாப் பயணி ஒருவர், 'ஏதோ சாகசம்தான் நடைபெறுகிறது என நினைத்தேன். ஸ்னோபால் விளையாட்டில் 'பின்'கள் விழுவது போல், மனிதர்கள் விழுந்தனர். சிலர் அந்தரத்தில் பறக்கவும் செய்தனர்' என்றார்.

இச்சம்பவத்தில் அக்காரில் இருந்த குழந்தைக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என கூறிய போலீஸார், அந்த பெண்ணை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட அப்பெண், எக்காரணத்தில் இவ்வாறு செய்தார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தீவிரவாதச் செயல் அல்ல என்று விளக்கமளித்த போலீஸார், இந்த விபத்தில் ஒருவர் இறந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் கூறினர்.

இந்த விபத்து நடந்த அதேநாளன்றுதான் லாஸ் வேகாஸ் நகரில் 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.