ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னணி: துருக்கி அதிபரை சந்திக்க மறுத்த ரஷ்ய அதிபர்

News image
Updated On :30 நவம்பர் 2015, 4:05 pm

ரஷ்ய போர் விமானம் துருக்கியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் துருக்கி அதிபரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு ரஷ்ய அதிபர் மறுத்துவிட்டார்.

சிரியா அருகேயுள்ள ஐ.எஸ். அமைப்பு மீது தாக்குதல் நடத்த சென்ற ரஷ்ய போர் வீமானம், தனது நாட்டின் வான் எல்லையில் அத்துமீறி பறந்ததாகக் கூறி, துருக்கி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இச்சம்பவத்தில் அந்த விமானத்தில் இருந்த ஒரு விமானி இறந்தார். இறந்த விமானியின் உடல் ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன்  ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபரை சந்திக்க, துருக்கி அதிபர் விரும்பினார். எனினும் அவரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு புதின் மறுத்துவிட்டதாக, ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே துருக்கி மீது ரஷ்யா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும், கடவுச்சீட்டு இல்லாமல் துருக்கியர்கள் ரஷியாவுக்கு வரும் நடைமுறை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.