சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜெர்மனியில் மாநகர மேயராகத் தேர்வு

ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் (49) வெற்றி பெற்றார்.

Updated On :

ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் (49) வெற்றி பெற்றார்.
 இந்தியாவிலிருந்து குடியேறிய தந்தைக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவரான இவர், அதிபர் ஏஞ்சலா மெர்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டார்.
 தேர்தலில் அசோக் ஸ்ரீதரன் வெற்றி பெற்றதன் மூலம், சமூக ஜனநாயகக் கட்சி மேயர்கள் பான் நகரை தொடர்ந்து 21 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 இந்தத் தேர்தலில் 50.06 சதவீத வாக்குகளுடன் அசோக் ஸ்ரீதரன் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருப்பது அரசியல் பார்வையாளர்களை வியப்படையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 பான் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அருகிலுள்ள கோனிக்ஸ்வின்டர் நகரின் துணை மேயராக அசோக் ஸ்ரீதரன் பொறுப்பு வகித்து வந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.