ஆப்கானிஸ்தானின் காஸ்னி பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது திடீரென தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 350க்கும் மேற்பட்ட கைதிகளை தப்பியோடச் செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில், சிறையின் முக்கிய நுழைவு வாயிலை, வெடிகுண்டுகள் நிரப்பிய காரைக் கொண்டு தலிபான் பயங்கரவாதி மோதியதில், கார் வெடித்துச் சிதறியது.
இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில் காவல்துறை உடையில் வந்த 6 பயங்கரவாதிகள், சிறைச்சாலைக்குள் நுழைந்து, சிறைக் கைதிகளை விடுவித்தனர்.
இதில் 352 சிறைக் கைதிகள் தப்பியோடினர். 80க்கும் மேற்பட்டோர் தப்பியோடும் போது பிடிபட்டனர்.
இந்த தாக்குதலில் 4 காவல்தறையினர் பலியாகினர். 10 காவல்துறையினர் மற்றும் 4 சிறைக்கைதிகள் என 14 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

