சிரியாவில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஹசாக் என்ற இடத்தில் உள்ள காஷ்மன் மற்றும் மஹாட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் ஒரு பெண் 2 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.
முதல் குண்டு வெடிப்பு வடக்கு புறநகரில் உள்ள காஷ்மன் நகரில் வாகனம் ஒன்றில் வெடிக்கச் செய்துள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சிலர் இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னர், அரை மணி நேரம் கழித்து மஹாட்டா என்ற நகரில் தண்ணீர் லாரி ஓட்டுனரிடம் இருந்து மற்றொரு வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த இரு தற்கொலை தாக்குதலினால் அங்குள்ள குழந்தைகள், பெண்கள் பீதியில் அலறி அடித்து ஓடினர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


