இணையதளம் வழியாக ஊடுருவி, அமெரிக்காவின் ரகசியத் தகவல்களை சீனர்கள் திருடினால், அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்போம் என அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கா வந்துள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் - அதிபர் ஒபாமா இடையே இணையதள ஊடுருவல் தொடர்பாக வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒபாமாவும், ஜீ ஜின்பிங்கும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது ஒபாமா கூறியதாவது:
இரு நாடுகளும் பரஸ்பர ரகசியத் தகவல்களை இணையதளம் மூலம் திருடுவதில்லை என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை அமெரிக்காவின் ரகசியத் தகவல்கள் சீன ஊடுருவல்காரர்களால் திருடப்பட்டால், அந்த நாட்டின் தனி நபர்கள் மீதோ, நிறுவனங்கள் மீதோ, அரசு அமைப்புகள் மீதோ பொருளாதாரத் தடைகள் விதிக்க அமெரிக்கா ஒருபோதும் தயங்காது என்றார் ஒபாமா. அதனைத் தொடர்ந்து அதிபர் ஜீ ஜின்பிங் கூறியதாவது:
இணையதள ஊடுருவல் தொடர்பாக இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ள நெறிமுறைகளை சீனா உறுதியாகக் கடைப்பிடிக்கும். இந்த விவகாரத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படுவதோ, மோதலில் ஈடுபடுவதோ இரு நாடுகளுக்கும் ஏற்புடையதல்ல என்றார் ஜின்பிங்.
அண்மையில், லட்சக் கணக்கான அமெரிக்க அரசு ஊழியர்கள் குறித்த ரகசியத் தகவல்கள் இணையதளம் வழியாக ஊடுரு வித் திருடப்பட்டன.
இந்தச் செயல் சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க எம்.பி.க்களும், அதிகாரிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விருந்துக்கு வந்த இந்திய - அமெரிக்கர்கள்
சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா அளித்த அரசு விருந்தில் மாஸ்டர் கார்டு நிறுவனத் தலைவர் அஜய் பாங்கா, பெப்ஸி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி, மைக்ரோசாஃப் நிறுவனத் தலைவர் சத்ய நாதெள்ளா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்கள், குடும்பத்தினருடன் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
அந்த விருந்துக்கு முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


