தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசந்தா தேர்வு!

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2016, 1:11 pm

நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

நேபாளப் பிரதமராகப் பதவி வகித்து வந்த கே.பி.சர்மா ஓலி கடந்த மாதம் 24-ஆம் தேதி ராஜிநாமா செய்தார். ஆளும் கூட்டணியில் இரு முக்கியக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்ததுடன், நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். தனது தோல்வி உறுதி என்ற நிலையில், கே.பி.சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க கால தாமதம் ஆகும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் இணைந்து இடைக்கால ஏற்பாடாக, தேசிய அரசை அமைக்க வேண்டும் என்று அதிபர் வித்யாதேவி பண்டாரி வலியுறுத்தியிருந்தார். அதன்படி பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் குறித்த அறிவிக்கையை அவைத்தலைவர் ஓம்சாரி கர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

இன்று காலை பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 573 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 363 வாக்குகளும், எதிராக 210 வாக்குகளும் பதிவாகின . இந்த தகவலை சபாநாயகர் ஓம்சாரி கர்த்தி முறைப்படி அறிவித்தார். இவர் நேபாளத்தின் 39-ஆவது பிரதமர் ஆவார்.

நாடாளுமன்றத்தின் தனிப்பெரும் கட்சியான நேபாளி காங்கிரஸ், மதேசிகள் உள்பட, முக்கிய கட்சிகள் பிரசந்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.