அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எரிவாயு பலூன் வெடித்து சிதறிய விபத்தில் 16 பேர் பலியானார்கள்.
டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது லோக்கார்ட் பிரதேசம் . இங்குதான் எரிவாயு பலூன் வெடித்து சிதறிய விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பலூனில் இருந்த 16 பேரும் உயிரிழந்தனர்.
வெடிப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இருந்த போதிலும் பலூன் அவசரமாக தரையிறங்கியபோது அவ்வழியாக செல்லும் மின்கம்பின் மீது உரசி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோர விபத்து தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது: இரண்டு முறை வெடிப்பு சத்தம் கேட்டது, பின்னர் அப்பகுதியில் உயரத்தில் தீக்கோளம் போன்று காட்சி அளித்ததை பார்த்தேன் என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

