பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவல் நிலையத்திற்கு எதிரே கார் குண்டு வெடிப்பு: துருக்கியில் 8 பேர் பலி; 100 பேர் காயம்!

துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் இன்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

News image
Updated On :4 நவம்பர் 2016, 12:00 pm

DIN

அங்காரா: துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் இன்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் உள்ளது பக்லர் மாவட்டம். இங்கு அமைந்துள்ள தீவிரவாதம் மற்றும் கலவர தடுப்பு பிரிவு  காவல்துறை அலுவலகத்தின் வெளியே இன்று காலை சக்தி வாய்ந்த கார் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்

1984-ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு எதிராகப் போராடி வரும்  'குர்தீஷ் தொழிலாளர் கட்சி' இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.  இந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும், குர்தீஷ் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.