டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஜப்பான் மன்னருடனான சந்திப்பு மிகப்பெரிய கௌரவம்: பிரதமர் மோடி

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :11 நவம்பர் 2016, 7:08 am


டோக்யோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா - ஜப்பான் நல்லுறவு குறித்து ஜப்பான் நாட்டு மன்னர் அகிஹிடோவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். இதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேயுடனான சந்திப்புக்குப் பிறகு, மன்னர் அகிஹிட்டோவை சந்தித்தார்.

ஜப்ன் மன்னர் அகிஹிட்டோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா - ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான விஷயங்கள் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.