டிரம்ப் மனைவிக்கு ஆடை வடிவமைக்க 'நோ ' சொன்ன பிரான்ஸ் டிசைனர்!

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிமைத்து தர முடியாது என்று பிரான்ஸ் நட்டு ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
டிரம்ப் மனைவிக்கு ஆடை வடிவமைக்க 'நோ ' சொன்ன பிரான்ஸ் டிசைனர்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிமைத்து தர முடியாது என்று பிரான்ஸ் நாட்டு ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

நடந்து முடிந்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை வெற்றி பெற்றுள்ளவர் டொனால்டு டிரம்ப், இவரது மனைவி மெலானியா (45). இவர் ஒரு முன்னாள் மாடல் அழகியாவார்.

பொதுவாக அமெரிக்க அதிபரின் மனைவிக்கு அந்நாட்டைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள்     புதிய நவ நாகரீக உடைகளை வடிவமைத்து தருவார்கள். அந்த வகையில் தற்போதைய அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி, ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அமெரிக்காவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான ஷோபி தெலாட் (52) ஆடைகளை வடிவமைத்து வழங்கியுள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

இவரிடம் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலானியாவுக்கு ஆடை வடிவமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் உடைகளை வடிவமைக்க முடியாது என்று மறுத்துள்ளார். அதற்கு அவர், 'ஒருவருக்கு ஆடை தயாரித்து கொடுப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட உரிமை ஆகும். தேர்தல் பிரசாரத்தின் போது மெலானியாவின் கணவர் டிரம்ப் இனவெறி பேச்சுக்கள், அவர் மீதான செக்ஸ் புகார்கள், வெளிநாட்டினர் மீதான எதிர்ப்பு கொள்கைகள்  என சர்ச்சைகளால் சூழப்பப்பட்டிருந்தார். எனவே மெலானியாவுக்கு நான் ஆடை தயாரித்து வழங்கமாட்டேன். என்னை பொறுத்தவரை எனக்கு பணம் முக்கியமல்ல' என ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது முடிவையே மற்ற நிபுணர்களும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இது பத்திரிகைகளில் வெளியாகி பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com