வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தாய்லாந்தின் புதிய மன்னரான பட்டத்து இளவரசர்! 

தாய்லாந்தின் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்ன் பதவியேற்றுக் கொண்டதாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:49 pm

பாங்காங்: தாய்லாந்தின் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்ன் பதவியேற்றுக் கொண்டதாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

உலகில் நெடுங்காலமாக தொடரும் முடியாட்சிகளில் தாய்லாந்தும் ஒன்று.அந்நாட்டின் மன்னராக இருந்தவர் பூமிபால் அதுல்யதேஜ். உடல் நாளாக குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், தனது 88-ஆம் வயதில், அக்டோபர் 13-ஆம் தேதியன்று மரணமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நாட்டு வழக்கப்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. அந்த கூட்டத்தில்  தாய்லாந்தின் புதிய மன்னராக பதவியேற்றுக் கொள்ளுமாறு பட்டத்து இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்னை ,நாடாளுமன்றம் அழைத்தது. பின்னர் அவர் பதவியேற்றுக் கொண்டதாக நாடாளுமன்றம் அறிவித்தது. கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி "புதிய மன்னர் நீடுழி வாழ்க" என்று கோஷம் எழுப்பினர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சட்ட சபையின் தலைவர் போர்ன்பெட்ச், ' அடுத்த மன்னராக இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்னை, 1972-ஆம் ஆண்டில், மறைந்த மன்னர் அதுல்யதேஜ் நியமித்ததாக தெரிவித்தார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.