தாய்லாந்தின் புதிய மன்னரான பட்டத்து இளவரசர்!
தாய்லாந்தின் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்ன் பதவியேற்றுக் கொண்டதாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.


பாங்காங்: தாய்லாந்தின் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்ன் பதவியேற்றுக் கொண்டதாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
உலகில் நெடுங்காலமாக தொடரும் முடியாட்சிகளில் தாய்லாந்தும் ஒன்று.அந்நாட்டின் மன்னராக இருந்தவர் பூமிபால் அதுல்யதேஜ். உடல் நாளாக குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், தனது 88-ஆம் வயதில், அக்டோபர் 13-ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்நாட்டு வழக்கப்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. அந்த கூட்டத்தில் தாய்லாந்தின் புதிய மன்னராக பதவியேற்றுக் கொள்ளுமாறு பட்டத்து இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்னை ,நாடாளுமன்றம் அழைத்தது. பின்னர் அவர் பதவியேற்றுக் கொண்டதாக நாடாளுமன்றம் அறிவித்தது. கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி "புதிய மன்னர் நீடுழி வாழ்க" என்று கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சட்ட சபையின் தலைவர் போர்ன்பெட்ச், ' அடுத்த மன்னராக இளவரசர் மஹா வஜ்ஜிரலோங்கோர்னை, 1972-ஆம் ஆண்டில், மறைந்த மன்னர் அதுல்யதேஜ் நியமித்ததாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...