சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'ஒபாமாவை பின்பற்றுங்க' -  டொனால்டு டிரம்புக்கு  சிஐஏ இயக்குநர்  அட்வைஸ்'

அமெரிக்க வெளியுறவுத் துறை தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் நிர்வாகம் பின்பற்றி வரும் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை, புதிய அதிபர் டிரம்ப்பும், அமைய உள்ள அவரது அரசும்..

News image
Updated On :30 நவம்பர் 2016, 1:35 pm

DIN

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் நிர்வாகம் பின்பற்றி வரும் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை, புதிய அதிபர் டிரம்ப்பும், அமைய உள்ள அவரது அரசும் கைவிடக்கூடாது என்று அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின்  இயக்குநர்  ஜான் பிரன்னன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது;

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான  பிரசாரத்தின் போது, 'ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் மதிக்கப் போவதில்லை' என்று டொனால்டு டிரம்ப் கூறினார். அவர் அப்படி நடந்து கொண்டால் அது அமெரிக்காவுக்கு பேரழிவாகவும், ட்ரம்பின் முட்டாள்தனமான  நடவடிக்கையாகவும் அமையும்

மேலும் சிரியாவில் வேண்டுமென்றே ரஷ்யவால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு அந்நாடு தண்டிக்கப்பட வேண்டும்.அத்துடன் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுவாக சொல்வதென்றால் வெளியுறவுத் துறை தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமா பின்பற்றி வரும் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கண்டிப்பாக கைவிடக்கூடாது.

இவ்வாறு ஜான் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.