பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஆஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவழி டிரைவர்!

ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி  வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:49 am

DIN

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி  வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்மீத் அலிஷேர் என்பவர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பஞ்சாபி இனத்தை சேர்ந்தவராவார்.  இவர் நேற்று தனது பணியில் இருந்த போது, பேருந்திலிருந்து பயணி ஒருவரால் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பேருந்து பயணிகள் அனைவரின் கண் முன்னால் நடைபெற்றது என்பது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. .

இந்த கொடூர சம்பவத்தை செய்த 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொலைக்காண காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.