பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஆறு இன்ச் நீள தாடி வளர்த்த இளம்பெண்: புதிய கின்னஸ் சாதனை!

லண்டனை சேர்ந்த சீக்கிய இளம்பெண் ஒருவர் இளம் வயதில் நீளமான தாடி வளர்த்த சாதனைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.    

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:33 am

DIN

லண்டனை சேர்ந்த சீக்கிய இளம்பெண் ஒருவர் இளம் வயதில் நீளமான தாடி வளர்த்த சாதனைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.    

தென் கிழக்கு இங்கிலாந்தின் பெர்க்ஷையர் மாகாணத்தின் ஸ்லோஹ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்மான் கவுர் (24). விளமபர மாடலாக உள்ளார். இவர் தனது முகத்தில் வளர்ந்த தாடியை பராமரித்து வந்தார். ஆறு இன்ச் அளவில் தாடி வளர்த்ததனால் இன்று அவர் மிக இளம் வயதில் நீளமான தாடி வளர்த்த பெண் என்ற சாதனைக்கு உரியவரானார்.  

அவரது சாதனைக்கு அங்கீகாரம் அளித்து வழங்கப்பட்டுள்ள சான்றில் வருடக்கணக்காக தன்மேல் சுமத்தப்பட்ட கேலிகளை, அவமானங்களைத் தாண்டி, ஹர்மான் இளம் வயதில் இன்று இந்த சாதனைக்கு உரியவராகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஹர்மான் இதனை தான் பெரிய சாதனையாக எண்ணவில்லை என்றும், பணிவாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.  .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.