இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் சிமோன்  பெரோஸ் மரணம்!

இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான சிமோன் பெரோஸ் (93) இன்று காலை  மரணமடைந்தார்.

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 7:32 am

DIN

இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான சிமோன் பெரோஸ் (93) இன்று காலை  மரணமடைந்தார்.

சிமோன்  பெரோஸ் நவீன் இஸ்ரேலை உருவாக்கியவர்களில்  முக்கியமான ஒருவர். அத்துடன் பாலஸ்தீனத்துடனான நட்புறவு வளர்க்க எடுத்த முயற்சிகளின் காரணமாக, 1994-ஆம் ஆண்டுக்கான  அமைதிக்கான நோபெல் பரிசும் பெற்றவர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். ஆனால் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவர் மருந்துகளால் உண்டாக்கப்பட்ட கோமா நிலையில் வைக்கப்பட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வந்த அவர், இன்று காலை 'திடீர்' என மரணம் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.