புட்டுமேயோ(கொலம்பியா): கொலம்பியாவில் நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர்பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
கொலம்பியா நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரையை உடைத்து வெளியேறிய வெள்ள நீரானது சேற்றுடன் சேர்ந்து வீடுகளை நிறைத்தது. இதன் காரணமாக உண்டான நிலச்சரிவின் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. 200 பேர் காயமடைந்துள்ளனர். பலரது நிலைமை என்னவென்றே தெரியவில்லை.
இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் பெரிய ஆறான மொகோவா ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தினால் புட்டுமேயோ மாகாணத்தின் மொகோவா நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் கிடைக்கவில்லை. காயமடைந்தவர்களால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மேனுவேல் சான்டோஸ் மொகேவா பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உடுமலை அருகே இருசக்கர வாகனம்- லாரி மோதல்: மூன்று இளைஞா்கள் உயிரிழப்பு

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

புன்செய்புளியம்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அதிக வட்டி வாங்கித் தருவதாக ரூ.5.50 கோடி மோசடி: காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் மனு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



