நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஞாயிறு காலை பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர்
கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள பசியா பிரதேசத்தில் இருந்து ஞாயிறு அதிகாலை, பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நகுரு-எல்டோரெட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் நகுரு பகுதியில் இருந்து எதிர் திசையில் வந்த லாரி ஒன்று பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரியின் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 30 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். மரணமடைந்தவர்களில் 3 வயது குழைந்து ஒன்றும் அடங்கும். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக நகுரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!

வெள்ளைப் பூச்சி தாக்குதலால் அழிவின் விளிம்பில் ஆம்பூா் தென்னை விவசாயம்

சட்டப் பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா்களாக சேர விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



