ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

இங்கிலாந்து தேர்தல் முடிவு : தவறான கணிப்புக்கு தண்டனையாக தன் புத்தகத்தின் பக்கங்களைத் தின்ற பேராசிரியர்! (வீடியோ இணைப்பு)

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து பொதுத் தேர்தல் முடிவுகளில், தன்னுடைய தவறான கணிப்புக்கு தணடனையாக, தான் எழுதிய புத்தகத்தின் பக்கங்களையே பேராசிரியர் ஒருவர் தின்ற வினோதம் நிகழ்ந்துள்ளது.    

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:44 pm

DIN

லண்டன்: சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து பொதுத் தேர்தல் முடிவுகளில், தன்னுடைய தவறான கணிப்புக்கு தணடனையாக, தான் எழுதிய புத்தகத்தின் பக்கங்களையே பேராசிரியர் ஒருவர் தின்ற வினோதம் நிகழ்ந்துள்ளது.    

இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மேத்யூ குட்வின் (35). ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகியது குறித்து 'Brexit: Why Britain voted to leave the European Union'. என்ற புத்தகத்தை இவர தனது நண்பர் ஒருவரோடு சேர்த்து எழுதியிருந்தார்.

இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து பொதுத் தேர்தலின் பிரச்சாரத்தின் பொழுது, ஜெர்மி கார்பின் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியானது 38 சதவீதத்திற்கு மேல் வாக்குகள்  பெறாது என்று, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கணிப்பு தெரிவித்திருந்தார்.

அத்துடன் அப்படி தொழிலாளர் கட்சியிலானது கூடுதல் வாக்குகள் பெற்றால், தான் எழுதிய புத்தகங்களின் பக்கங்களை தானே தின்பதாகவும் டிவிட்டரில் சவால் விட்டிருந்தார்.

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பொழுது, தொழிலாளர் கட்சியானது 40.3% வாக்குகளை பெற்றிருந்தது. இதன் காரணமாக தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் மேத்யூ குட்வினை, 'சொன்ன வார்த்தை என்ன ஆயிற்று?' என்று டிவிட்டரில் கேலி செய்து வந்தனர்.

அவர்களுக்கு பதில் அளித்த மேத்யூ குட்வின், 'நான் சொன்ன சொல்லை காப்பற்றுவேன், புகழ்பெற்ற ஸ்கை தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு  நிகழ்ச்சியில் புத்தகத்தின் பக்கங்களை சாப்பிடுகிறேன்' என்று பதில் அளித்திருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் ஸ்கை தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு  நிகழ்ச்சியில் மேத்யூ குட்வின் பங்கேற்றார். அப்பொழுது அவர், 'இரண்டு சதவீதமென்பது கணிசமான அளவுதான். என்னுடைய வாக்கை நான் காப்பாற்றுகிறேன்' என்று கூறியவாறு தன்னுடைய புத்தகத்தின் பக்கக்களை கிழித்து மெல்ல ஆரம்பித்தார். பின்னர் சோகமான முகத்துடன் 'தம்பஸ் அப்' முத்திரை காட்டியபடி தொடர்ந்தார்.

ஆனால் கொஞ்ச நேரம் கழித்து ஸ்கை தொலைக்காட்சியின் செய்தித் தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ' குட்வின் புத்தகத்தின் பக்கங்களை முழுவதுமாக விழுங்கவில்லை' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது   

வீடியோ: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.